நுபுர் ஷர்மா வீடியோ: வாலிபருக்கு கத்திக்குத்து!

நுபுர் ஷர்மா வீடியோ: வாலிபருக்கு கத்திக்குத்து!

Share it if you like it

முகமது நபி குறித்து நுபுர் ஷர்மா பேசிய வீடியோவை பார்த்துக் கொண்டிருந்த ஹிந்து வாலிபரை இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த 4 இளைஞர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பா.ஜ.க. முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, கடந்த மாதம் ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதியான தஸ்லிம் அகமது ரெஹ்மானி என்பவர், சிவலிங்கத்தைப் பற்றி அவதூறாகப் பேசினார். ஆகவே, இஸ்லாமிய மதப் புத்தகத்தில் முகமது நபி பற்றி இடம்பெற்றிருக்கும் ஒரு கருத்தை நுபுர் ஷர்மா சுட்டிக்காட்டினார். இதை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலர், வைரலாக்கி இஸ்லாமியர்கள் மத்தியில் வெறுப்பை விதைத்தனர். இதனால், நுபுர் ஷர்மாவை கண்டித்தும், கைது செய்யக் கோரியும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, நுபுர் ஷர்மா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இது ஒருபுறம் இருக்க, நாடு முழுவதும் உள்ள ஹிந்துக்கள் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக களமிறங்கினர். சில மாநிலங்களில் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக ஹிந்துக்கள் பேரணியும் நடத்தினர். அதேபோல, நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் பதிவுகளையும், வீடியோ பதிவுகளையும் வெளியிட்டனர். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த டெய்லர் கன்ஹையா லால், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மருந்தாளுனர் உமேஷ் கோஹ்லே ஆகியோர் வீடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தனர். இவர்கள் இருவரையும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொடூரமாகக் கொலை செய்தனர்.

இந்த நிலையில், பீகார் மாநிலம் சிதாமர்ஹி மாவட்டம் பகீரா கிராமத்தைச் சேர்ந்த அங்கித் ஜா என்கிற இளைஞர், அங்குள்ள ஒரு கடையில் அமர்ந்து முகமது நபி குறித்து நுபுர் ஷர்மா பேசிய வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களான பிலால், ரப்பானி, ஹிலால், முகமது நிஹால் ஆகியோர், எப்படி முகமது நபியை அவதூறாகப் பேசிய வீடியோவை பார்க்கலாம் என்று சொல்லி அங்கித் ஜாவிடம் தகராறு செய்திருக்கிறார்கள். இதனால், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இது முற்றிய நிலையில், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அங்கித் ஜாவை சரமாரியாக குத்தி இருக்கிறார்கள். இதில் பலத்த காயமடைந்த அங்கித் ஜாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அங்கு ஆபத்தான நிலையில், அங்கித் ஷா சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பீகார் மாநில போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறார்கள். இச்சம்பவம் பீகார் மாநிலத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it