மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் கபட நாடகம் ஆடிய சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது.
நாட்டின் 15-வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த 18. 07. 2022 அன்று நடைபெற்றது. அதன்படி, நேற்றைய தினம் 21 .07. 2022 ஜனாதிபதி தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், பா.ஜ.க. வேட்பாளர் திரெளபதி முர்மு 64% வாக்கு பெற்று இருந்தார். இவரை, எதிர்த்த களம் இறங்கிய யஷ்வந்த் சின்ஹா வெறும் 36% வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார். இதையடுத்து, வருகிற 25. 07. 2022 அன்று புதிய ஜனாதிபதியாக திரெளபதி பதவி ஏற்கிறார்.
இதனிடையே, பழங்குடியின வேட்பாளர் திரெளபதியை நான் ஆதரிப்பேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 34 நான்கு எம்.பி.களில் வெறும் நான்கு பேர் மட்டுமே அவருக்கு வாக்களித்து இருக்கின்றனர். அதில், இரண்டு செல்லாது ஓட்டு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அக்கட்சியை சேர்ந்த ஒரே ஒரு எம்.எல்.ஏ. மட்டுமே திரெளபதிக்கு தனது ஆதரவினை வழங்கி இருக்கிறார்.
பழங்குடியின பெண்மணியை ஆதரிப்பேன் என்று கூறிவிட்டு. நாட்டு மக்களையும், பழங்குடியினத்தவர்களையும் முதல்வர் ஏமாற்றிய சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது. பா.ஜ.க.வின், மூத்த தலைவரும் மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி, இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.