குரூப் – 4 தேர்வு: மீண்டும் அதே கேள்வியை கேட்ட தி.மு.க!

குரூப் – 4 தேர்வு: மீண்டும் அதே கேள்வியை கேட்ட தி.மு.க!

Share it if you like it

ஈ.வெ.ரா. குறித்து குரூப் – 4 தேர்வில் கேட்கப்பட்டு இருக்கும் கேள்வி பொய்யானது என பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஈ.வெ.ரா இல்லை என்றால் தமிழகம் இல்லை. தமிழரின் உரிமையை நிலை நாட்டியவர் ஈ.வெ.ரா என்று தி.மு.க. மற்றும் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் அரைநூற்றாண்டுக்கு மேலாக தமிழகத்தில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். அப்பாவி தமிழக மக்களும் இந்த பொய் பிரச்சாரத்தை இன்று வரை நம்பி வருகின்றனர். அந்த வகையில், தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ் என்று பெரியாருக்கு ’யுனெஸ்கோ விருது’ வழங்கப்பட்டதாக தி.மு.க. மற்றும் தி.க.வினரால் இன்று வரை கூறி வருகின்றனர். ஆனால், அது ’ராசியப்பன் பாத்திர கடையில் செதுக்கிய விருது’ என்பதை அப்பாவி தமிழக மக்கள் அறிந்திருக்கவில்லை. இத்தனை, ஆண்டு காலம் தமிழர்களை தி.மு.க. மற்றும் தி.க.வினர் ஏமாற்றி வந்தனர் என்பதே நிதர்சனம்.

இதனிடையே, பிரபல எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக இருப்பவர் மாரிதாஸ். இவர் தான், ஈ.வெ.ரா.விற்கு வழங்கப்பட்ட ’யுனெஸ்கோ விருது உண்மையானது அல்ல அது போலியான விருது என புள்ளி விவரத்துடன் நாட்டு மக்களுக்கு தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து, தமிழக மக்களுக்கு உண்மை தெரிய வந்தது. இத்தனை, ஆண்டு காலம் தமிழக மக்களை ஏமாற்றி வந்த திராவிடர் கழகம் பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வேண்டுக்கோள் விடுத்து இருந்தார்.

மாரிதாஸின் இந்த பகீர் குற்றச்சாட்டிற்கு இன்று வரை இரு கழகங்களும் பதிலடி கொடுக்க முடியாமல் திணறி வருகின்றன. இதனை தொடர்ந்து, மலேசிய நாட்டு அரசு 6 -ம் வகுப்பு பாடத்தில் இருந்து ஈ.வெ.ரா. குறித்த சில பகுதிகளை கடந்த ஆண்டு நீக்கி இருந்தது. அந்த வகையில், தமிழக பாடத்திட்டத்திலிருந்து ’யுனெஸ்கோ பட்டம்’ விருது குறித்தான தகவலை நீக்க வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி பாட புத்தக குழு பரிசீலனை செய்து 12 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதனை தொடர்ந்து, தந்தை பெரியாரின் சேவையை போற்றும் விதமாக நாட்டின் மிக உயரிய விருதான ’தாமிரபட்டை’ விருதினை மத்திய அரசு அவருக்கு வழங்கி இருப்பதாக தி.மு.க. மற்றும் தி.க.வினர் கூறி வந்தனர். இந்த நிலையில் தான், பிரபல அரசியல் விமர்சகரான செல்வ குமார். ஈ.வெ.ரா.விற்கு வழங்கப்பட்ட விருது போலியானது என ஆதாரத்துடன் குறிப்பிட்டு இருந்தார். இப்படியாக, ஈ.வெ.ரா. மற்றும் தி.க.வினரின் போலி முகத்திரைகள் தொடர்ந்து கிழிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தான், ஈ.வெ.ரா. குறித்த கேள்வியினை குரூப் – 4 வினாத்தாளில் தமிழக அரசு கேட்டு இருக்கிறது. இச்சம்பவம், தற்போது, தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இன்னும் எத்தனை ஆண்டு காலம் தான் ஈ.வெ.ரா. என்ற பொய் பிம்பத்தை தமிழர்கள் தலையில் தி.மு.க. திணிக்கும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Image


Share it if you like it