புகழ் பெற்ற லயோலா கல்லுரி மீண்டும் பெரும் சர்ச்சையில் சிக்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு கொண்டு இருக்கும் கல்லூரி லயோலா. இக்கல்லூரியில், தமிழகத்தை சேர்ந்த பிரபலங்களின் வாரிசுகள் படித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தையும் தாண்டி இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட கல்லூரியாக இது இருந்து வருகிறது. அதேவேளையில், தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் கல்லூரிகளில் இது முதன்மையான என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
இதனிடையே, லயோலா கல்லூரியில் பணி புரிந்து வந்த தமிழ் பேராசிரியை ஒருவருக்கு அதே கல்லூரியை சேர்ந்த பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பகீர் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு ரூ.64.3 லட்சத்தை லயோலா கல்லுரி உடனே வழங்க வேண்டும் என பெண்கள் ஆணையம் அதிரடியான தீர்ப்பினை வழங்கி இருந்தது.
இதனை தொடர்ந்து, ஓவிய கண்காட்சி என்ற பெயரில் பாரத நாடு, பிரதமர் மோடி மற்றும் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக, அருவருக்கதக்க வகையில் ஓவிய கண்காட்சியை நடத்தி இருந்தது. இதையடுத்து, ரூ. 96,46,688 சொத்துவரியை கட்டாமல் லயோலா கல்லூரி நிலுவை தொகை வைத்து இருப்பதாக சென்னை மாநகராட்சி குற்றம் சுமத்தி இருந்தது. இப்படியாக, லயோலா கல்லுரி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான், அக்கல்லூரியின் முன்னாள் ஊழியர் லாரன்ஸ் தன்னிடம் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டதாகவும், தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்தும் உருக்கமுடன் பிரபல யூ டியூப் சேனலான சாணக்கியாவிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார். அதன் லிங்க் இதோ.
கிறிஸ்தவ மதத்தில் ஜாதியில்லை, பேதமில்லை என இதுநாள் வரை கூறி வந்த வி.சி.க. தலைவர் திருமாவளன் மற்றும் சமூக நீதியின் காவலர்களாக தம்மை காட்டிக் கொள்ளும், பீட்டர் அல்போன்ஸ் மற்றும் ஜெகத் கஸ்பர் உள்ளிட்டவர்கள் லாரன்ஸ்க்கு நிகழ்ந்த கொடுமைகள் குறித்து பேச முன்வருவார்களா என்பது பலரின் எதிர்ப்பார்ப்பாக இருந்து வருகிறது.