இந்தியா எப்போது ஹிந்து நாடாக மாறும் என்பது குறித்து பிரபல ஜோதிடர் அனிருத் குமார் மிஸ்ரா தனது கணிப்பினை வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல ஜோதிடராக இருப்பவர் அனிருத் குமார் மிஸ்ரா. இவர், கணித்து கூறும் பலன்கள் பெரும்பாலும் சரியாகவே இருக்கும். அதாவது 10-க்கு 7 என்ற முறையில் துள்ளியமாக இருக்கும். அந்த வகையில், பொதுமக்களையும் தாண்டி மிகப்பெரிய அரசியல் தலைவர்கள் கூட இவரது கணிப்பை மிக உறுதியாக நம்புவர். ராம ஜென்ம பூமி வழக்கில் இறுதி தீர்ப்பின் படி அயோத்தியில் ராம பிரானுக்கு கோயில் கட்டப்படும் இது நிச்சயம் நடக்கும் என கடந்த 5 வருடங்களுக்கு முன்பே மிக துல்லியமாக கணித்தவர்.
அதேபோல, மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவுவார் என தெரிவித்து இருந்தார். அவர், கணித்தது போன்று கடந்த 2021 – ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் சுவேந்த் அதிகாரியிடம் மம்தா படுதோல்வியை தழுவி இருந்தார்.
இதனை தொடர்ந்து, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான கூட்டணியே அபார வெற்றி பெறும் என கணித்தவர். மிஸ்ரா தெரிவித்தது போன்று இரண்டாவது முறையாக மோடி பதவி ஏற்று இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில், இந்திய ஜனநாயகம் மற்றும் ஜனநாயக அமைப்புகள் முன்பு போல மோலோங்கி இருக்கும் எனவும் இந்தியா 2029-ல் இந்து நாடு என்று அறிவிக்கப்படும் என அவர் கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பிரதமர் மோடி ஆரோக்கியமாக இருப்பார். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அவர் தான் பிரதமராக இருப்பார் என கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கணித்து இருந்தார். அதேபோல, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவருக்கும் பிரதமர் ஆகும் வாய்ப்பு பிரகாசமான முறையில் இருக்கும் என அவர் கணித்து இருக்கிறார்.
Pray God the prediction comes TRUE.