தி.மு.க.வின் இரட்டை வேடம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு உண்டு என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்து இருந்தார். ஆனால், விடியல் ஆட்சி அமைந்து ஒரு வருடத்தை கடந்து விட்டது இன்று வரை பூரண மதுவிலக்கு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்கவில்லை என்பதே நிதர்சனம். அந்த வகையில், போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” எனும் திட்டத்தைத் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படத்தையும் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. ஆகவே, முதல் நாளான ஆகஸ்ட் 14 -ஆம் தேதியே குடிமகன்கள் முண்டியடித்து கொண்டு சரக்குகளை வாங்கி குவித்துள்ளனர். அந்த வகையில், ஆகஸ்ட் 14-ஆம் தேதி மட்டும், ஒரே நாளில் ரூ.273.92 கோடிக்கு மது விற்று தீர்ந்தது. முந்தைய ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தனது சாதனையை தி.மு.க. அரசு மீண்டும் முறியடித்து இருப்பதாக நெட்டிசன்கள் விடியல் அரசை வெகுவாக பாராட்டி வருகின்றனர். சென்னை மண்டலத்தில் ரூ. 55.77 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ. 53.48 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
மது இல்லாத தமிழகம் என மக்கள் முன்பு உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும். அதேவேளையில், குடிமகன்களையும் குஷிப்படுத்த வேண்டும். இதுதான், “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” திட்டத்தின் லட்சணமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.