தீண்டாமை கொடுமை: பட்டியல் சமூக மாணவர் அடித்து கொலை… பிஸியான திருமா!

தீண்டாமை கொடுமை: பட்டியல் சமூக மாணவர் அடித்து கொலை… பிஸியான திருமா!

Share it if you like it

பட்டியல் சமூகத்தை சேர்ந்த மாணவர் தீண்டாமை கொடுமை காரணமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த பலர் ராஜினாமா செய்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சுரானா என்கிற கிராமம். இங்குள்ள, தனியார் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இவன், பள்ளி இடைவேளை நேரத்தில் தாகம் எடுக்கவே, பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பானையில் இருந்த நீரை எடுத்து குடித்து இருக்கிறான். இதைக் கண்ட பள்ளி ஆசிரியர் சைல் சிங், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நீ, உயர் சமூகத்தினர் குடிக்க வேண்டிய பானை தண்ணீரை குடிக்கிறாயா என்று கூறி, சிறுவனை சரமாரியாக அடித்திருக்கிறார்.

அப்போது, சிறுவனின் காதுப் பகுதியில் ஒரு அடி பலமாக விழுந்திருக்கிறது. இதனால், காது நரம்பு பாதிக்கப்பட்டு சிறுவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறான். இதையடுத்து, அச்சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அருகிலுள்ள ஜலோர் மாவட்ட மருத்துவமனையில் சிறுவனை சேர்த்திருக்கிறார்கள். பின்னர், மேல் சிகிச்சைக்காக உதய்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டான்.

இச்சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. பனா சந்த் மேக்வால் உட்பட 12 கவுன்சிலர்கள் ராஜினாமா செய்து இருக்கின்றனர். இதுதான், தற்போது நாடு முழுவதும் பேசுப் பொருளாக மாறி இருக்கிறது. ஏற்கனவே, முதல்வர் அசோக் கெலட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இருவருக்கும் மத்தியில் பனிப்போர் நிகழ்ந்து கொண்டு இருக்கும் இவ்வேளையில், இச்சம்பவம் அரங்கேறி இருப்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே சம்பவம், பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் நடைபெற்று இருந்தால். மோடி, அமித்ஷா தான் காரணம் என இந்நேரம் தாய் சிறுத்தை பாய்ந்து இருக்கும். காங்கிரஸ் ஆளும் மாநிலம் என்பதால் தனது பிறந்த நாளை முன்னிட்டு சிறுத்தை பதுங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it