தங்களின் அடிப்படை உரிமைகளை கூட பெற முடியாமல் மடல் எழுதி கோரிக்கை வைக்கும் நிலையை உருவாக்கியவரும். ஒரே நாளில் தமிழகத்தையே தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தான் கரூர் எம்.பி. ஜோதிமணி.
மக்களவை நிகழ்வின் பொழுது பா.ஜ.காவை சேர்ந்த எம்.பி சங்கீதா சிங் தியோ என்பவர் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து புகார் ஒன்றை கூறியுள்ளார். அதில் ஜோதிமணி மற்றும் ரம்யா ஹரிதாஸ் இரு காங்கிரஸ் எம்.பிக்கள் சேர்ந்து தன்னை தாக்கியதாக கூறியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு எம்.பி என் நெஞ்சில் ஒங்கி அடித்து. என் கையில் ரத்தம் வரும் அளவு கீறி கீழ்த்தரமாக நடந்துக்கொண்டார். அதிர்ஷ்டவசமாக அங்கு வந்த “ஸ்மிருதி இரானி என்னை அவர்களிடம் இருந்து காப்பாற்றி அழைத்து வந்தார். அவர் வரவில்லை என்றால் என் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 12, 2020 முந்தைய பதிவு:
கரூர் எம்.பி. ஜோதிமணியை தேடும் -பொதுமக்கள்!
கரூர் காங்கிரஸ் பெண் எம்.பி. இரண்டு முறை போட்டியிட்டு தோல்வியுற்றவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைத்துவுடன் மக்கள் இவர் மீது அனுதாபம் கொண்டு வெற்றி வைத்தனர்.
ஆனால் இவரோ மக்களின் அடிப்படை உரிமைகளை கூட சரியாக நிறைவேற்றாமல் எங்கு உள்ளாரோ என மக்கள் தேடும் நிலையில் அவர் உள்ளார். மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என தங்களுக்கு தேவையான உதவிகளை கூட பெறமுடியாமல் கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
தன்னை இரண்டு முறை தோற்கடித்த மக்களை பழிவாங்குகிறாரோ என எண்ண தோன்றுவதாக அடிப்படை உரிமைகள் கிடைக்காத சில பொதுமக்களின் கருத்தாக உள்ளது. அரவக்குறிச்சியை தவிர மற்ற ஜந்து சட்டசபை தொகுதிகளில் அலுவலகம் கூட இல்லை என்ற அவலநிலை நிலவுவதாக அவ்வூர் மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கரூரைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் என்பவர் வாட்ஸ் அப்பில் எம்.பி. ஜோதிமணிக்கு திறந்த மடல்’ ஒன்றை எழுதி இருப்பது போன்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.