தனிநாடு கோரிக்கை வைத்த வி.சி.க. மூத்த தலைவர் வன்னியரசுக்கு பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவராக இருப்பவர் வன்னியரசு. இவரது, கருத்துக்கள் அனைத்தும் தேசத்திற்கு எதிராகவும், பிரிவினையை தூண்டும் வகையிலும் இருக்கும். இவரது, வன்மம் நிறைந்த பேச்சுக்கு பின்னால், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும் கிறிஸ்தவ மிஷநரிகளின் மறைமுக ஆதரவு இவருக்கு உண்டு என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது.
இதனிடையே, இந்தியாவை உளவு பார்க்கப்போகும் சீன கப்பல்: எப்படி எதிர்கொள்ளப்போகிறது இந்திய அரசு? என அண்மையில் பிரபல ஊடகமான நியூஸ் 7 தமிழ் ஊடக விவாதம் ஒன்றினை நடத்தி இருந்தது. இந்நிகழ்ச்சியில், வன்னியரசு, முன்னாள் ராணுவ உயர் அதிகாரி கர்னல் தியாகராஜன் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அப்போது, பேசிய வன்னியரசு வழக்கம் போல பாரதப் பிரதமர் மோடிக்கு எதிராகவும், தேசத்திற்கு எதிராகவும் பேசினார். இதையடுத்து, தேசிய கொடியை அவமதிக்கும் நோக்கில் அவர் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு, கர்னல் தியாகராஜன் தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது மட்டுமில்லாமல் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இப்படிப்பட்ட சூழலில், செங்கொடியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வன்னியரசு பேசியதாவது; செங்கொடியின் இந்த நினைவு நாளில், விடுதலை தமிழகத்தின் முழுமையான விடுதலை. தமிழ், தமிழர்களின் உரிமை இந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழ்நாடு என்பது தனித்துவமான நாடு என்பதை அடைவது தான் செங்கொடிக்கு நாம் செலுத்த கூடிய உறுதிமொழி, கடமை ஆகும். என வழக்கம் போல தனது விஷம் நிறைந்த கருத்தை அப்பாவி இளைஞர்கள் மனதில் வன்னியரசு திணித்து இருக்கிறார்.
தனி தமிழ்நாடு குறித்து பேசுவதற்கு முன்பு தங்களது, கூட்டணி கட்சிகளிடம் பேசி முதலில் உட்காருவதற்கு சேர் வாங்குங்கள் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.