தேச விரோத வழக்குகள் அதிகம் பதிவு ஆகும், மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்புக்க வந்த பின்பு, சட்டம் ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாக இருப்பது ஒருபுறம் என்றால், தேசத்திற்கு விரோதமான கருத்துக்கள், காணொளிகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு, செங்கொடியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசியதாவது; செங்கொடியின் இந்த நினைவு நாளில், விடுதலை தமிழகத்தின் முழுமையான விடுதலை. தமிழ், தமிழர்களின் உரிமை இந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழ்நாடு என்பது தனித்துவமான நாடு என்பதை அடைவது தான் செங்கொடிக்கு நாம் செலுத்த கூடிய உறுதிமொழி, கடமை என்று பேசியிருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம் ‘இந்தியாவில் குற்றங்கள் – 2021 என்ற புள்ளி விவர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, உ.பி.யில் 1,862 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதையடுத்து, 564 வழக்குகளுடன் தமிழ்நாடு 2-ம் இடத்தை பிடித்து இருக்கிறது. இதுகுறித்தான, செய்தியினை பிரபல பத்திரிகையான தினத்தந்தி வெளியிட்டு இருக்கிறது.
ஆதாரம் இதோ..