Share it if you like it
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரும் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சுப்பராயன் அவர்களை காணவில்லை என சமூக வலைதளங்களில் பல பேர் பதிவிட்டு வருவதாக தினமலரில் செய்தி வந்துள்ளது. அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது; திருப்பூர் மக்கள் அனைவருக்கும் பொதுவான எம்பியாக பதவிப்பிரமாணம் செய்தவரும் சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்கள் கூட்டத்தில் மட்டும் காட்சி தருபவரும், சி.ஏ.ஏவை ஆதரிப்பவர்களை புறக்கணித்து அவர்களிடமிருந்து மறைந்தவருமான எம்.பி சுப்பராயன் அவர்களை காணாமல் அனைத்து திருப்பூர் தொகுதி மக்களும் வருந்துகிறோம் என்று அந்நாளிதழில் வந்திருப்பது தமிழகம் முழுவதும் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
Share it if you like it