தனது மன்ற நிர்வாகிகளை சந்தித்த பின் வீடு திரும்பிய ரஜினி பத்திரிகையாளர்களை சந்தித்தார். ஆலோசனை கூட்டம் குறித்தும், CAA தொடர்பாக முஸ்லீம் பெரியவர்களை ரஜினி சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ரஜினி, முஸ்லீம் பெரியவர்களுடனான சந்திப்பு இனிமையாக இருந்ததாகவும், CAA தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் அச்சம் இருந்தால், நேரடியாக மத்திய உள்துறை அமைச்சர் அல்லது பிரதமரை நேரடியாக சந்தித்து பேசுமாறும், அரசியல்வாதிகளை சந்திப்பதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். தேவைப்பட்டால் சந்திப்புக்கு தாமே ஏற்பாடு செய்து தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பத்திரிகையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுத்தார். முஸ்லிம்களை வைத்து அரசியல் செய்து வரும் திமுக, காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளை ரஜினி மறைமுகமாக சாடியுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.