மத்திய அரசு எழுதிய கடிதம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நெறியாளர் அசோகா கேட்க அதற்கு முழுப்பலாக அவர் பதில் அளித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல ஊடகமான தந்தி டிவி மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நடத்திய நேர்காணலில் அவர் அளித்த பதில் இதோ;
மின்கட்டணத்தை, உயர்த்தினால் தான் மானியம் வழங்குவோம் என மத்திய அரசு எழுதிய கடிதத்தை தமிழக அரசு காட்ட வேண்டும் என பா.ஜ.க.வினர் கூறி வருகின்றனர். இதுகுறித்து, உங்கள் கருத்து என்ன? என்று நெறியாளர் அசோகா கேள்வி எழுப்பினார். அதற்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி, நான் கேட்பது எல்லாவற்றிற்கும் ஆதாரத்தை வெளியிடும் பி.ஜே.பி. செந்தில் பாலாஜி என்றைக்கு சிறைக்கு செல்வார் என்று கூறும் பி.ஜே.பி. அமலாக்கத்துறை எனக்கு எப்போது சம்மன் அனுப்பும் என்று கூறும் பிஜேபி. இந்த ஆதாரத்தையும் வெளியிட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
உங்களுக்கு, வந்த கடிதத்தை நீங்கள் தானே காட்ட வேண்டும் என நெறியாளர் கேட்டார். ரகசியகாப்பு உறுதிமொழி எடுத்து இருக்கும் என்னிடம் எந்த அர்த்தத்தில் கேள்வி கேட்கிறிர்கள் என செந்தில் பாலாஜி கேட்டார். இதற்கு நெறியாளர், ரகசியகாப்பு உறுதிமொழி எடுத்து இருப்பதாக கூறும் நீங்கள். கடிதம், வந்தது குறித்து பொதுவெளியில் பேசியிருக்க கூடாது. எனக்கு, வந்த தொடர் அழுத்தத்தினால் தான் கடிதம் குறித்து பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது.
கடிதம் வந்தது பற்றி கூறுகிறீர்கள். அதில், என்ன குறிப்பிடப்பட்டு இருக்கிறது என்று கூட சொல்லியுள்ளிர்கள். இதையெல்லாம், கூறும் நீங்கள் கடிதத்தை ஏன்? வெளியிட கூடாது என நெறியாளர் கேட்டார். அதற்கு, அமைச்சர் அதனை பி.ஜே.பி. தான் வெளியிட வேண்டும் என கூறிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.