ஹிந்து கோயிலில் ஃபேஷன் ஷோ: பஜ்ரங் தள் ஆர்ப்பாட்டம்!

ஹிந்து கோயிலில் ஃபேஷன் ஷோ: பஜ்ரங் தள் ஆர்ப்பாட்டம்!

Share it if you like it

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ஹிந்து கோயிலில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஃபேஷன் ஷோ நடத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையறிந்த பஜ்ரங் தள் அமைப்பினர், ஃபேஷன் ஷோவை பாதியிலேயே தடுத்து நிறுத்தியதோடு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் புகழ்பெற்ற சலாசர் பாலாஜி கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலில் எஃப்.டி.சி.ஏ. என்கிற நிறுவனம் ஃபேஷன் ஷோவை நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த ஆரிஃப் என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக கோயிலின் மண்டபம் ஃபேஷன் ஷோ மேடையாக மாற்றப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்க பார்வையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த ஃபேஷன் ஷோவில் ஹிந்து பெண்கள் நவநாகரிக உடையணிந்து ரேம்ப் வாக் நடந்து கொண்டிருக்க, இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்தபடி, வெளியில் நின்று பார்வையாளர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். இந்த விவரம் பஜ்ரங் தள் அமைப்பினருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பஜ்ரங் தள் அமைப்பினர், கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இச்சம்பவம் ஹிந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துதாகவும் பஜ்ரங் தளத் தொண்டர்கள் குற்றம்சாட்டினர். அப்போது, இஸ்லாமிய பெண் ஒருவர், பஜ்ரங் தள் அமைப்பினரிடம் கையெடுத்து கும்பிட்டு, நடந்த சம்பவத்துக்காக மன்னிப்புக் கேட்டார். பின்னர், ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எனினும், இதுகுறித்து பஜ்ரங் தள் அமைப்பினர் டெலிபந்தா காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால், ஹிந்து கோயிலில் ஃபேஷன் ஷோ நடத்தியது ஹிந்துக்களின் மனதை புண்படுத்தி இருப்பதால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பின்னர், இதுகுறித்து பேசிய பஜ்ரங் தள் மாவட்ட கன்வீனர் ரவி வாத்வானி, “இச்சம்பவம் குறித்து டெலிபந்தா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஹிந்துக்களின் மனதையும், மத உணர்வுகளையும் இந்நிகழ்ச்சி புண்படுத்தி இருப்பதால் அமைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று போலீஸாரிடம் வலியுறுத்தி இருக்கிறோம். கோயில்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது முறையற்றது. ஆகவே, இதுபோன்ற தவறுகள் இனியும் நடக்கக் கூடாது” என்றார்.


Share it if you like it