பிரதமர் கனவில் இருந்து வரும் ஸ்டாலின் கனவில் ஆ.ராசா, திருமா, வீரமணி உள்ளிட்டவர்கள் மண் அள்ளி போட்டு இருப்பதாக விவரம் அறிந்த முக்கிய புள்ளி ஒருவர் கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காந்தி, தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, பீகார் முதல்வர் நித்திஸ் குமார் உள்ளிட்டவர்கள் பிரதமர் கனவில் இருந்து வருகின்றனர். அந்த வரிசையில், தாமும் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது வரை காய் நகர்த்தி வருகிறார்.
அதனை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, சட்டசபையில் 110 விதியின் கீழ் ‘அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும்’ என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதுதொடர்பான, விவரம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹிந்தி மொழியில் இக்கடிதம் வெளியிடப்பட்டு இருந்தது தான் ஹைலைட்.
இதனிடையே, இந்திய பிரதமராக ஸ்டாலின் ஏன்? ஆக கூடாது எனும் புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டு இருந்தது. இப்புத்தக, வெளியிட்டு விழாவில் தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பீகார், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மோடிக்கு எதிராக பலமான கூட்டணியை எதிர்க்கட்சிகளால் ஒருங்கிணைக்க முடியவில்லை என்பதே நிதர்சனம். இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வின் நாடி துடிப்பை நன்கு அறிந்த முக்கிய புள்ளி ஒருவர் கூறியதாவது ; தேசிய அளவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தம் தலைமையிலான கூட்டணி பூர்த்தி செய்ய வேண்டும் என ஸ்டாலின் காய் நகர்த்தி வருகிறார். அதனை மெய்ப்பிக்கும் வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இதர முக்கிய தலைவர்களை சந்திக்க வேண்டி அடிக்கடி டெல்லி சென்று வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில் தான், ஹிந்துக்கள் குறித்து ஆ.ராசா பேசியிருக்கும் கருத்து தமிழகத்தையும் தாண்டி, இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதவிர, ஆ. ராசாவின் காணொளி அனைத்து இந்திய மொழிகளிலும், மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதன் மூலம், தமிழக முதல்வர் ஸ்டாலினின் திட்டமும், அவரது பிரதமர் கனவும் ஆ.ராசாவின் பேச்சின் மூலம் டமால் என வெடித்து இருக்கிறது. ஆ. ராசாவின் பின்னால், வீரமணி, திருமாவளன் உள்ளிட்டவர்கள் இருக்க கூடும்? என அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.