ஒரு காலத்தில் ஆன்மீக சொற்பொழிவு, மூலம் பல நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்தவர், என்கிற பெருமைக்கு சொந்தக்காரர், மட்டுமில்லாமல் பேச்சில் தெளிவு, பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் அறிவாற்றல், அனைத்திற்கும் உதாரணமாக திகழ்ந்தவர் சுகி.சிவம், என்று கூறினால் அதுமிகையன்று.
ஆனால் காலபோக்கில் அவரின் பேச்சில் ஹிந்து விரோத கருத்துக்கள் மெல்ல மெல்ல தலைதூக்க ஆரம்பித்தது. கடந்த வருடம் நடைபெற்ற அத்திவரதர், விழாவை பற்றி நம்ம ஊர் கோயில்களில், இருக்கும் பெருமாளுக்கு இல்லாத சக்தியா, நாற்பது ஆண்டுகள் குளத்தில் இருக்கும், பெருமாளுக்கு வந்திடுமா? வயதானவர்கள் கூட்டத்தில் நசுங்கி இறக்கிறார்கள், கர்ப்பிணிகள் கூட்டத்தில் நசுங்கித் துன்பப்படுகிறார்கள்… நாம் கஷ்டப்படனும்னு கடவுள் நினைப்பார…உண்மையான பக்தியோடு நீங்கள் வணங்கினால், கடவுள் உங்கள் வீட்டுக்கே வருவார்’’ என்று கூறியிருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு சுகி.சிவம், முருகன் வேறு, சுப்ரமணியன் வேறு, என்று கூறியிருந்தார். இந்த மிகப்பெரிய சர்ச்சையை அடங்குவதற்குள், இன்று ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள, ஏழுமலையானுக்கு 4,000 கோடி, கருப்பு பணம் உள்ளதாக கூறியிருந்தார். இதற்கு பா.ஜ.க தேசிய செயலாளர் ஹச்.ராஜா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
ஏழுமலையானுக்கு பக்தர்கள் இடும் காணிக்கையை ஏழுமலையான் 4000 கோடி கறுப்புப் பணம் வைத்துள்ளதாக சுகி சிவம் பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவர் ஏன் தசமபாகம் பற்றி பேசுவதில்லை. இவர் தொடர்ந்து ஈவான்ஞ்சலிஸ்ட்க்களின் குரலாக ஒலித்து வருகிறார். இந்துக்கள் இவரை புரிந்து கொள்ள வேண்டும் pic.twitter.com/e11KTWMcTb
— H Raja (@HRajaBJP) March 12, 2020
”ஏழுமலையானுக்கு பக்தர்கள் இடும் காணிக்கையை ஏழுமலையான் 4000 கோடி கறுப்புப் பணம் வைத்துள்ளதாக சுகி சிவம் பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவர் ஏன் தசமபாகம் பற்றி பேசுவதில்லை. இவர் தொடர்ந்து ஈவான்ஞ்சலிஸ்ட்க்களின் குரலாக ஒலித்து வருகிறார். இந்துக்கள் இவரை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்”
திருப்பதி பெருமாள் பற்றி சுகி. சிவம் கூறியதை அடுத்து, மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டது. வீரமணி கோஷ்டியை சார்ந்த நபர் போல் இவர் தொடர்ந்து பேசுவதற்கு தங்களது கடும் கண்டனத்தை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.