மது போதையில், 9 பேர் கொண்ட கும்பல் கூரிய ஆயுதங்களுடன் மதுரையில் அடாவடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக முதல்வராக, ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையிலேயே இருந்து வருகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மது, கஞ்சா என தமிழகம் அழிவு பாதையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. நாங்கள், ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் ஒரு சொட்டு இருக்காது. இது எனது வாக்குறுதி என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மற்றும் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்து இருந்தனர்.
விடியல் ஆட்சி அமைந்து 16 மாதங்களை கடந்து விட்டது. இன்று வரை, பூரண மதுவிலக்கு சட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்படவில்லை. இதன்காரணமாக, படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் என பலர் மதுவிற்கு அடிமையாகும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த கொடுமைகள் ஒருபுறம் என்றால், பள்ளி மாணவர்கள் கஞ்சாவிற்கு அடிமையாகும் நிகழ்வுகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படியாக, ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் மெல்ல மெல்ல சீரழித்து வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், மதுரை மாவட்டம் வளையங்குளத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக வாக்கு வாதம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது, மதுபோதையில் இருந்த சமூக விரோதிகள் கண்ணில் பட்ட இரு சக்கர வாகனங்களை எல்லாம் கூரிய ஆயுதங்களால், அதுவும் பட்டப்பகலில் தாக்கி இருக்கின்றனர். இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இக்காணொளி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலினின் தூக்கம் இன்றைக்கும் அம்போ என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.