மகனும், மருமகனும்தான் ஆள்கிறார்கள்… தி.மு.க. ஆட்சியை விளாசும் பொதுமக்கள்..!

மகனும், மருமகனும்தான் ஆள்கிறார்கள்… தி.மு.க. ஆட்சியை விளாசும் பொதுமக்கள்..!

Share it if you like it

ஸ்டாலினிடம் திறமையான ஆட்சி இல்லை. அவரது மகனையும், மருமகனையும் வைத்து ஆள்கிறார் என்று தி.மு.க. ஆட்சியை பொதுமக்கள் விளாசி வருகிறார்கள்.

கடந்த ஒன்றை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியை, ஆகா ஓகோவென்று முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர்களும், அவர்களது கட்சியினரும் புகழ்ந்து வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சியினரோ ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அ.தி.மு.க. அரசு கொண்டுவந்த திட்டங்களை தி.மு.க. செயல்படுத்தி வருவதாகவும், திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கியது தாங்கள்தான் என்றும் மார்தட்டி வருகிறது. பா.ஜ.க.வோ, மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு திட்டங்களாக அறிவித்து ஸ்டாலின் அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது என்று குற்றம்சாட்டி வருகின்றனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், தி.மு.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், ஸ்டாலின் ஆட்சி எப்படி இருக்கிறது? என்பது குறித்து தனியார் சேனல் ஒன்று பொதுமக்களிடம் கருத்துக் கேட்டது. இதில்தான், எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாது பொதுமக்களும் தி.மு.க. ஆட்சி மீது கடும் அதிருப்தியில் இருப்பது தெரியவந்திருக்கிறது. “ஸ்டாலினிடம் திறமையான ஆட்சி இல்லை. தனது மகனையும், மருமகனையும் வைத்து ஆட்சி செய்கிறார்” என்று ஒருவர் கூறுகிறார். நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு முதல்வர் என்கிற முறையில் ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டும். நல்ல முதல்வராக இருந்தால், பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஆனால், பிரச்னைகளில் இருந்து எஸ்கேப் ஆகப்பார்க்கிறார் ஸ்டாலின். இது நல்ல முதல்வருக்கு அழகல்ல என்று கூறுகிறார் குடும்பத் தலைவி ஒருவர்.

அதேபோல இன்னொருவரோ, முதலில் மக்களுக்கு மரியாதை தர வேண்டும். இழிவாகவோ, மட்டமாகவோ மக்களை பேசக் கூடாது. அமைச்சர் பொன்முடி ஓசி பஸ்லதானே போறீங்க என்று எகத்தாளமாகக் கேட்கிறார். மக்கள் வரிப்பணத்தில்தானே இலவசமாகப் போகிறார்கள். அமைச்சர் தனது சொந்தப் பணத்தில் இலவசமாக அனுப்பி வைக்கிறாரா. இன்னும் சொல்லப்போனால், அமைச்சர்களுக்கு சம்பளமே மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் கொடுக்கப்படுகிறது. அப்படியானால், அவர் ஓசியில் சாப்பிடுவதாக கூற முடியுமா? என்று கேள்வி எழுப்புகிறார். இன்னொரு பெண்மணியோ, இலவசம் என்பது மக்கள் கேட்கவில்லை. அவர்கள் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக கொடுத்தது. இதற்கு யார் பொறுப்பு என்று விளாசி எடுக்கிறார்.

ஆக மொத்தத்தில் தமிழகத்தை ஆளும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி, மக்களிடம் நற்பெயரை சம்பாதிக்கவில்லை என்பதோடு, அவப்பெயரை மட்டுமே சம்பாதித்திருக்கிறது என்பது இதன் மூலம் புலனாகிறது.


Share it if you like it