தலைவன் எவ்வழியோ, கட்சி தொண்டனும் அவ்வழியே என்பதற்கு ஏற்ப திமுக மீது பரவலாக மக்களின் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அக்கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர் என அவ்வபொழுது செய்தித்தாள்களில் தலைப்பு செய்தியாக வருவதை காண முடிகிறது.
கடந்த மாதம் 15ம் தேதி அன்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக அமைப்பு செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி உரையாற்றும் பொழுது மனதில் உள்ள வன்மத்தை வெளிப்படுத்தினார். அதில் ஊடகம், பட்டியலின மக்களை பற்றி மிக கீழ்தரமாக விமர்சனம் செய்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம், எழுந்ததை அடுத்து தனது வருத்தத்தை தெரிவித்தார்.
இந்நிலையில் ஆதி திராவிடர் மக்கள் கட்சி தலைவர், கல்யாணசுந்தரம் சென்னை தேனாம்பேட்டை காவல், நிலையத்தில் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் தாழ்த்தபட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் அவரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.