பிரபல எழுத்தாளர் பத்ரி சேஷாத்திரியின் பூணூலை கத்தரிப்பேன் என பேசிய சுப. வீர பாண்டியனுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி தக்க பதிலடியை கொடுத்துள்ளார். இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியிருக்கிறார் ;
நாராயணன் பதிவு இதோ;
பத்ரி சேஷாத்திரியை அரசு பொறுப்பில் நியமிப்பதும், நீக்குவதும் அரசின் உரிமை. அவர் யாரையாவது அநாகரீகமாகவோ, தரக்குறைவாகவோ பேசியிருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரமும், கடமையும் உள்ளது. நேரு, இந்திரா காந்தி, இராஜாஜி, காமராஜர், எம் ஜி ஆர், ஜெயலலிதா மற்றும் எண்ணற்ற தலைவர்களை அச்சில் ஏற்ற முடியாத தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்த கூட்டம் தான் இந்த திராவிடர் கழக கூட்டம்.
அதே போல், தற்போதும் ஹிந்து மத கடவுள்களை, மத நம்பிக்கைகளை அநாகரீகமாக, தரக்குறைவாக, இழிவாக பேசிய, பேசிக்கொண்டிருக்கின்ற திராவிடர் கழக மற்றும் அதன் தோழமை கும்பல் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உள்ளது. ஆனால், பத்ரி சேஷாத்திரியை கண்டிக்கும் போர்வையில், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் சுப.வீர பாண்டியன், பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளதோடு, பூணூலை கத்தரித்து விடுவோம் என்று மிரட்டும் தொனியில் பேசியிருப்பது சிறுபான்மை சமூகமான பிராமண சமூகத்திற்கு விடப்பட்டு இருக்கும் அப்பட்டமான மிரட்டல்.
பத்ரி சேஷாத்திரி என்ற தனிநபரை விமர்சனம் செய்ய வேண்டுமென்றால் செய்து கொள்ளட்டும், ஆனால், இது போன்று தனிநபர் தொடர்புடைய விவகாரங்களில் வேறு எந்த சமூகத்தையாவது ஒட்டு மொத்தமாக இழித்தும், பழித்தும் பேசுவதற்கு சுப.வீர பாண்டியன் போன்ற ‘கோழைகளுக்கு’ தைரியம் உள்ளதா? பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்கள் திருப்பி தாக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் இது போன்ற வன்மம் மிகுந்த தரக்குறைவான, மலிவான சாதிய விமர்சனங்களை இந்த ‘கோழைகள்’ முன்வைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பத்ரி சேஷாத்திரி தவறு செய்திருந்தால், முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள், அவர் மீது நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால், ஒட்டுமொத்தமாக ஒரு சாதியை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ள, மிரட்டியுள்ள சுப. வீரபாண்டியன் மீது நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்? பூணூலை அறுப்பேன் என்று பேசிய சுப.வீரபாண்டியனை, இது அனைவருக்குமான ஆட்சி என்று பெருமிதம் கொள்கிற முதலமைச்சர், அதன் படி நடந்து கொள்வாரா? மத துவேஷங்களை செய்பவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என சட்டசபையில் உறுதி கொடுத்த முதலமைச்சர் ஒரு குறிப்பிட்ட சாதியினரை அவதூறு செய்து , மிரட்டல் விடுத்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ள சுப. வீரபாண்டியனை கைது செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவாரா? நேர்மையான ஆட்சி நடத்துவதாக சொல்லிக்கொள்வதை உறுதி செய்வாரா? நியாயமாக நடந்து கொள்வாரா?