தி.மு.க. ஆபாச பேச்சாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையத்தில் பா.ஜ.க நிர்வாகி நடிகை குஷ்பு நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.
தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது, அழகு நிலையத்தில் தகராறு, ஓசி தேங்காய், ஓசி பஜ்ஜி கேட்டு பெண்களிடம் தகராறு என கழக கண்மணிகள் செய்த அட்டூழியங்கள் அதிகம். இதுகுறித்தான, காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். ஆட்சி மாறியதே தவிர தமிழகத்தில் காட்சி மாறவில்லை என்பதே நிதர்சனம்.
இதனிடையே, சென்னை ஆர்.கே.நகரில் தி.மு.க.வின் சார்பில், அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் தி.மு.க.வை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில், கலந்து கொண்ட சைதை சாதிக் என்பவன் இவ்வாறு பேசினான் ; நடிகைகளும், பா.ஜ.க. நிர்வாகிகளுமான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரின் பெயர்களை சொல்லி, நாலுமே ஐடங்கள் என்று மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்து இருந்தான்.
அதேவேளையில், நடிகை குஷ்புவை தி.மு.க. நிர்வாகி ஒருவருடன் தொடர்புபடுத்தி அருவருக்கதக்க வகையில் பேசியிருந்தான். மேடையில் இருந்த அமைச்சர், சைதை சாதிக்கை கண்டிக்காமல் அவனின் பேச்சை கேட்டு சிரித்து கொண்டு இருந்த சம்பவம் தான் கொடுமையிலும் கொடுமை. பா.ஜ.க. பெண் நிர்வாகிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தினை சமீபத்தில் நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட சூழலில், ஆபாச பேச்சாளர் சைதை சாதிக் விடியல் ஆட்சியால் இன்று வரை கைது செய்யப்படவில்லை என்பதே நிதர்சனம். இந்த நிலையில், தனக்கு நீதி வேண்டி, நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தில் தி.மு.க.வின் மீது புகார் தெரிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் பிரபல நடிகையுமான குஷ்பு