தமிழக எம்.எல்.ஏ.க்களை வளைக்க சொன்ன கெஜ்ரிவால்: சுகேஷ் பகீர்!

தமிழக எம்.எல்.ஏ.க்களை வளைக்க சொன்ன கெஜ்ரிவால்: சுகேஷ் பகீர்!

Share it if you like it

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தமிழக எம்.எல்.ஏ.க்களை வளைக்க சொன்னதாக அரசியல் புரோக்கர் சுகேஷ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு அக்கட்சி இரண்டாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாக மாறி இருந்தது. இதையடுத்து, அக்கட்சி பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் இரட்டை சிலை சின்னத்தை முடக்கியது. இதனிடையே, அ.தி.மு.க.வின் சின்னம் தனக்கு கிடைக்கும் வகையில், டெல்லியை சேர்ந்த புரோக்கர் சுகேஷ் சந்திரசேகரின் உதவியை டி.டி.வி. தினகரன் நாடியதாக பல்வேறு ஊடகங்களும், பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டு இருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

இதனிடையே, பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளில் சிக்கிய சுகேஷ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். தமிழக அரசியலில் எப்படி? பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாரோ, அதேபோல டெல்லி அரசியலிலும் பெரும் புயலை கிளப்பி விட்டு இருக்கிறார். அதாவது, சிறையில் இருந்து ஊடகங்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறான் ;

இந்தியாவின் மிகப்பெரும் கொள்ளைக்காரன் என என்னை பற்றி கூறியிருக்கிறீர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களே. மாநிலங்களவை சீட் தருவதாக என்னிடம் ரூ.50 கோடி பெற்றீர்கள். 20 முதல் 30 பேரிடம்  பேசி ரூ. 500 கோடி பணம் திரட்டிக் கொடுத்தால், ஆம் ஆத்மி சார்பாக தேர்தல் சீட்டும், பதவிகளும் தருவதாக கூறினீர்கள். தமிழ்நாட்டின் சில எம்.எல்.ஏக்கள், நடிகர்களை ஆம் ஆத்மியில் இணைக்கும் வேலைகளை செய்ய வற்புறுத்தினீர்கள். நான் பெரிய கொள்ளைக்காரன் என்றால் நீங்கள் மகா கொள்ளையக்காரன். ஒட்டு மொத்த ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் கொடுக்க இருக்கிறேன். பதிலளிக்கத் தயாராக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.


Share it if you like it