சின்னவரை சீண்டிய மாணவி!

சின்னவரை சீண்டிய மாணவி!

Share it if you like it

மாணவர்களின் வாழ்வு உங்களுக்கு விளையாட்டாக மாறி விட்டதா என்று பள்ளி மாணவி ஒருவர் தி.மு.க.வை பார்த்து கேள்வி எழுப்பி இருக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ஏழை, எளிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நீட் தேர்வினை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இருப்பினும், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இதற்கு தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தன. அந்த வகையில், தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நீட் தேர்வை ரத்து செய்வோம். அதன் ரகசியம், எங்களுக்கு மட்டுமே தெரியும் என்று தி.மு.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார். இதுதவிர, அப்போதைய அ.தி.மு.க.வை பார்த்து கொஞ்சமாவது, வெட்கம், மானம், சூடு, சொரணை, இருக்கிறதா என்று மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், பள்ளி மாணவி ஒருவர் தி.மு.க.வை வெளுத்து வாங்கி இருக்கிறார். இதுகுறித்து, அவர் பேசியதாவது ;

நீட் தான் ஒரே தீர்வு என்று சொன்னார்கள். எனவே, நாங்களும் படிக்க ஆரம்பித்தோம். இதற்கு மத்தியில், அறிவிப்பு ஒன்று வருகிறது. விரைவில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள். அப்படியே, மூன்றாவது பக்கத்தை திருப்பி பார்த்தால், விரைவில் நீட் தேர்வுக்காக பயிற்சி மையம் துவங்கப்படும் என்று அறிவிப்பு வருகிறது. இதில், நாங்கள் எதனை நம்புவது. இது முரண்பாடாக இல்லையா. இப்படி, இருக்கு இல்லை என்று மாற்றி மாற்றி பேசி விளையாட மாணவர்களின் வாழ்க்கை என்ன விளையாட்டு மைதானமா என்று தி.மு.க.வை வெளுத்து வாங்கி இருக்கிறார்.


Share it if you like it