குடியுரிமை திருத்தச்சட்டம் பற்றி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு தங்களுக்கு இருக்கும் பல்வேறு சந்தேகங்களையும், அவர்களின் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.
குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தவறாக பிரச்சாரம் செய்து நாடு, முழுவதும் வன்முறை ஏற்பட வித்திட்டனர். இதில் பல அப்பாவி மக்களின் உயிர், உடைமை , பலத்த சேதம் ஏற்பட்டது. அண்மையில் இஸ்லாமிய அமைப்புகளை மட்டும், அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை, நடத்தி உள்ளது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
அனைத்து கட்சிகளையும் முதல்-அமைச்சர், அழைத்து பேச வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள், சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு, எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்று இஸ்லாமிய அமைப்புகள் தங்கள், கருத்தினை தெரிவித்தது. கூட்டம் நிறைவுக்கு பின் முன்னாள் எம்.பி காதர் மொய்தீன் பத்திரிக்கையாளர்களின் சந்திப்புக்கு பின் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தால், இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றி விடுவார்கள், என்பது பொய் இது உண்மைக்கு புறம்பான செயல். இந்த சட்டத்தால், இஸ்லாமியர்களுக்கு, எவ்விதத்திலும் பாதிப்பு இல்லை. எங்கள் சமுதாய மக்களிடையே நிலவும், குழப்பத்தை நீக்க அரசு முன் வர வேண்டும் என்று இவ்வாறு அவர் கூறியுள்ளார்.