அரசாங்க குழந்தைகளின் அட்டூழியம்: நடவடிக்கை எடுப்பாரா உதயநிதி?

அரசாங்க குழந்தைகளின் அட்டூழியம்: நடவடிக்கை எடுப்பாரா உதயநிதி?

Share it if you like it

சேப்பாக்க சட்டமன்ற தொகுதி திறந்தவெளி டாஸ்மாக் பாராக மாறி வருகிறது என சமூக ஆர்லவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் மற்றும் திருவல்லிகேணி – சேப்பாக்க சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர், வெற்றி பெற்ற பிறகு சில நாட்கள் தனது தொகுதியில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனை, தி.மு.க.வின் அடிமை ஊடகங்கள் ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளின. அதன்பின்பு தனது தொகுதிக்கு செல்வதை படிப்படியாக குறைத்து கொண்டார். இதன்காரணமாக, அத்தொகுதி மக்கள் தங்களது குறைகளை அவரிடம் எடுத்த கூட முடியாமல் இன்றுவரை திணறி வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது.

இதனிடையே, சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் அண்மையில் பலத்த மழை பெய்தது. அந்த வகையில், பெரிதும் பாதிக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றாக சேப்பாக்க சட்டமன்றமும் பார்க்கப்படுகிறது. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூட சொல்ல உதயநிதி செல்லவில்லை என்பதற்கு கீழ்கண்ட காணொளியே சிறந்த உதாரணம்.

இப்படிப்பட்ட சூழலில், உதயநிதியின் தொகுதியில் பொது இடத்தில் மது அருந்தும் அவலம் நடந்து வருகிறது. டாஸ்மாக்கிலிருந்து (கடை எண் 812 ) மதுபாட்டில்களை வாங்கி கொண்டு திருவல்லிகேணி மெயின்ரோட்டில் உள்ள ‘கெல்லட் ஸ்கூல் பேருந்து நிறுத்தம் முன்பாக கும்பல் கும்பலாக மதுபிரியர்கள் குடித்து கும்மாளம் அடித்து வருகின்றனர்.

இதன்காரணமாக, அப்பகுதியை கடக்கும் பெண்கள், முதியவர்கள் மற்றும் இளம் பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். இதுதவிர, பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பேருந்து நிறுத்தம் முன்பு நிற்கே அச்சப்படுகின்றனர்.

ஆடியோ லான்ச், பட பூஜைக்கு செல்லும் உதயநிதி தனது தொகுதி மக்களின் குறைகளை போக்க முன்வர வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Share it if you like it