ஹிந்து மதத்தை அவமதித்தால் 5 ஆண்டு… கம்யூனிஸம் பரப்பினால் 4 ஆண்டு சிறை: இந்தோனேஷியா அதிரடி!

ஹிந்து மதத்தை அவமதித்தால் 5 ஆண்டு… கம்யூனிஸம் பரப்பினால் 4 ஆண்டு சிறை: இந்தோனேஷியா அதிரடி!

Share it if you like it

ஹிந்து மதத்தை அவமதித்தால் 5 ஆண்டுகளும், கம்யூனிஸத்தை பரப்பினால் 4 ஆண்டுகளும், திருமணம் கடந்த உறவு வைத்திருந்தால் ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் புதிய சட்டத்தை இந்தோனேஷிய அரசு கொண்டு வந்திருக்கிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியா, சுற்றுலாவுக்கு மிகவும் புகழ் பெற்றது. இஸ்லாமிய நாடான இது, உலக மக்கள் தொகையில் 4-வது இடத்தையும், மிகப்பெரிய ஜனநாயக நாடுகளின் வரிசையில் 3-வது இடத்தையும் பிடித்திருக்கிறது. இங்கு பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால், திருமணம் தாண்டிய உடலுறவு, பாலியல் வன்கொடுமைகள், லிவ்விங் டுகெதர், கே, லெஸ்பியன் என இயற்கைக்கு புறம்பான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வந்தன.

இதையடுத்து, இதுபோன்ற சமூக அவலங்களை களையும் நோக்கில், இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் திருமணம் கடந்த உடலுறவுக்குத் தடை விதிக்கும் சட்டம் 2019-ம் ஆண்டு நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், அச்சட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், உலக சுற்றுலா மற்றும் முதலீட்டிற்கான இடமாக அறியப்படும் இந்தோனேஷியாவில் இப்புதிய சட்டம் ஏற்படுத்த இருக்கும் பாதிப்புகள் குறித்து பல்வேறு வணிகத் துறையினர் கவலை தெரிவித்திருந்தனர். ஆகவே, இச்சட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

திருமணம் கடந்த உறவுக்கு ஓராண்டு சிறை:

இந்த நிலையில்தான், சுமார் 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, தற்போது இச்சட்டம் இந்தோனேஷியாவில் மீண்டும் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தின்படி, திருமணத்துக்கு முன்பு ஆண், பெண் இணைந்து வாழ்வது குற்றமாகக் கருதப்பட்டு, 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்படும். அதேபோல, திருமணம் தாண்டிய உறவு வைத்திருந்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். இச்சட்டம் இந்தோனேஷிய குடிமக்கள் மட்டுமன்றி அந்நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், மதத் துவேஷத்தில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ஏற்கெனவே இச்சட்டம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், தற்போது ஹிந்து, பௌத்தம், கன்பூஸியம் உள்ளிட்ட மதங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதேபோல, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கொள்கைகளை கடைப்பிடிப்பவர்களிடம் தொடர்பு வைத்திருந்தால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். தவிர, கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை பரப்பினால் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டங்கள் அனைத்தும் இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.


Share it if you like it