80 வருடங்கள் ஆனாலும் பட்டத்து இளவரசர் பிளேபாயாக தான் இருப்பார் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கோவை அன்னுரை சேர்ந்த விவசாயிகளின் விருப்பமின்றி தமிழக அரசு அவர்களின் நிலங்களை கைப்பற்ற முயன்று வருகிறது. இதனை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், அவர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் விதமாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அன்னூர் சென்றுள்ளார். இதையடுத்து, விவசாயிகள் மத்தியில் அவர் பேசும் போது இவ்வாறு கூறினார் ;
காலையில் முதல்வர் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது, அமைச்சர் மா.சுப்பிரமணியனை பார்த்து எனது மகனின் கலகதலைவன் படத்தை பார்த்தீர்களா? படம் எப்படி? உள்ளது என்று கேட்கிறார். ஆட்சிக்கு வந்து நாலு படம் எடுத்தார். அந்த படங்களின் மூலமாக பட்டத்து இளவரசரை டெவலப் செய்து வருகிறார்கள். நான் இன்றைக்கு அன்னூரிலிருந்து சொல்கிறேன். 80 வருடங்கள் ஆனாலும், 80 படங்கள் எடுத்தாலும், ரூ. 8 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் பட்டத்து இளவரசர் பிளே பாயாக தான் இருப்பார்.
நீங்கள் எல்லாம், படத்திற்காக சாக்கி சட்டையை வாடகைகாக போட்டு கொண்டு நடிப்பவர். அதனை 10 ஆண்டுகள் அணிந்து வேலை செய்து இருக்கிறேன். சாக்கி சட்டை போடுவதற்கு ஒரு தகுதி வேண்டும். என் கையில் 120 கோடி படம் இருக்கு. தயாரிப்பு நிறுவனம் என்னிடம் இருக்கு என்று கருதி கொண்டு காக்கி சட்டை போட்டு படத்தில் நடித்தால் மக்களின் காவலனாக கனவில் மட்டுமே ஆகலாம். நிஜத்தில் ஆக முடியாது.
தொடர்ந்து 80 வருடங்கள் படத்தை எடுங்கள், இதற்கு, தான் முதல்வர் ஸ்டாலின் அக்கறை செலுத்துகிறார். விவசாய பெருமக்களின் மீது அவருக்கு அக்கறை இல்லை. மக்களின் பிரச்சனை என்ன? அதனை எவ்வாறு சரி செய்யலாம் என்பது குறித்து அவர் கவலைப்படுவதில்லை. தமிழகத்தில், விவசாய பிரச்சனை இல்லாத போது ஒரு குரூப் டெல்லி செல்லும் அவர்கள் எல்லாம் ஆடிகார் வைத்து இருப்பார்கள் என அண்ணாமலை பேசியிருக்கிறார்.