தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் விரைவில் வெளியிடப்படும் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக, ஸ்டாலின் பொறுப்பு ஏற்று கொண்ட பின்பு, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், தி.மு.க. அமைச்சர்கள் செய்த பல் வேறு தகிடுதத்தங்களை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், இன்னும் சில நாட்களில், அமைச்சர்களின் அடுத்த கட்ட ஊழல் பட்டியல் வெளியிடப்படும். தற்போது, சரசாரி மனிதர்கள் பேசும் அளவிற்கு ஊழல் பல துறைகளிலும் பெருகிவிட்டது. இரண்டு, மூன்று அமைச்சர்கள் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் சேரிக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர், அமைச்சர்கள் மாற்றத்திற்கான மனநிலையில் இருப்பதால், விரைவில் அவற்றை வெளியிடுவோம் என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை மீண்டும் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.