ஆட்டம்… பாட்டம்… கொண்டாட்டம்: மாவோயிஸ்டுகளின் பகீர் வீடியோ வைரல்!

ஆட்டம்… பாட்டம்… கொண்டாட்டம்: மாவோயிஸ்டுகளின் பகீர் வீடியோ வைரல்!

Share it if you like it

ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் மாநில எல்லையோரம் இருக்கும் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் உற்சவ நிகழ்ச்சி நடத்திய வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிஸா, மேற்குவங்கம், பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருக்கிறது. குறிப்பாக, ஆந்திரா, சத்தீஸ்கள், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் இவர்களின் நடமாட்டம் அதிகளவில் இருக்கிறது. இவர்கள் அவ்வப்போது போலீஸார் மீதும், துணை ராணுவப் படையினர் மீதும் தாக்குதல் நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் நக்சல்கள் மற்றும் மாவோயிஸ்டுகளை வேட்டையாடும் பணி துரிதப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில், ஏராளமான நக்சலைட்டுகளும், மாவோயிஸ்ட்டுகள் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகி இருக்கிறார்கள்.

இதுபோன்ற துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த நக்சஸ்கள் மற்றும் மாவோயிஸ்டுகளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் உற்சவ நிகழ்ச்சிகளை மாவோயிஸ்ட்டுகள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், நிகழாண்டு ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் மாநில எல்லையில் மாவோயிஸ்டுகளின் உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கிறது. இந்நிகழ்ச்சியில், மாவோயிஸ்டுகள் தங்களது இயக்கக் கொடிகளை ஏந்தி ஊர்வலமாக சென்றிருக்கிறார்கள். மேலும், பொதுமக்கள் மத்தியில் கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி இருக்கிறார்கள். இதுகுறித்த வீடியோ ஒன்றை மாவோயிஸ்ட் இயக்கம் வெளியிட்டிருக்கிறது. இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, எல்லையோர வனப்பகுதிகளில் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.


Share it if you like it