அன்று ஹிந்து துவேசம்… இன்று ஹிந்து சடங்கு: அமீர்கானின் அதிரடி மாற்றம்; அடிச்ச அடி அப்புடி!

அன்று ஹிந்து துவேசம்… இன்று ஹிந்து சடங்கு: அமீர்கானின் அதிரடி மாற்றம்; அடிச்ச அடி அப்புடி!

Share it if you like it

தனது படங்களில் எல்லாம் ஹிந்து மத துவேசத்தில் ஈடுபடும் பாலிவுட் நடிகர் அமீர்கான், லால் சிங் சத்தா படம் படுதோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, ஹிந்து விமர்சனத்தை தவிர்த்து வருகிறார். அதோடு, தனது அலுவலகத்தில் ஹிந்து முறைப்படி பூஜையும் நடத்தி இருக்கிறார்.

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான். இவர், தனது திரைப்படங்களில் எல்லாம் ஹிந்து சாமியார்களை வில்லன்களாக சித்தரித்து படம் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதேபோல, தனது படங்களில் ஹிந்து மதத்தை கேலி கிண்டல் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். உதாரணமாக, சமீபத்தில் வெளியான லால் சிங் சத்தா திரைப்படத்தில் கூட, சாலையோரம் கிடக்கும் கல்லை எடுத்து, குங்குமம் தடவி சாமி சிலையாக்குவதுபோல கிண்டல் செய்திருந்தார். அமீர்கான் மட்டுமல்ல, பாலிவுட் ஹீரோக்கள் பலரும் ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தையும் அவமானப்படுத்தும் வகையிலும், கேலி கிண்டல் செய்தும் தங்களது திரைப்படங்களில் காட்சிகள் அமைப்பதை ஒரு மரபாகவே வைத்திருக்கிறார்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஹிந்துக்கள் பொங்கி எழத் துவங்கி விட்டார்கள். கடந்த ஓராண்டாகவே பாய்காட் பாலிவுட் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஹிந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் பாய்காட் பாலிவுட் என்கிற ஹேஷ்டேக்கோடு, அந்த நடிகரின் பெயரையும் போட்டு பாய்காட் என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக, அமீர்கான் படங்கள் வெளியாகும் இந்த ஹேஷ்டேக் பயங்கரமாக ட்ரெண்ட செய்யப்படும். ஏனெனில், ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுவதோடு மட்டுமல்லாமல், நாட்டை அவமதிக்கும் வகையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியவர் அமீர்கான்.

அதாவது, குஜராத் கலவரத்தின்போது மோடிக்கு எதிராக ஸ்டேட்மென்ட் விடுத்த அமீர்கான், இந்தியா சகிப்புத்தன்மை இல்லாத நாடு என்றும், வாழத்தகுதியற்ற நாடு என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால், அமீர்கான் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த ஹி்ந்துக்கள், அவரது படங்கள் வெளியாகும் போதெல்லாம் பாய்காட் ஹேஷ்டேக்கை வைரலாக்குவார்கள். அந்த வகையில், ஹாலிவுட்டில் சக்கைப்போடு போட்ட ஃபாரஸ்ட் கம்ப் என்கிற திரைப்படத்தை ரீமேக் செய்து, லால் சிங் சத்தா என்கிற பெயரில் ஹிந்தியில் ரிலீஸ் செய்தார்கள். இந்த படம் வெளியானபோது பாய்காட் பாலிவுட், பாய்காட் அமீர்கான், பாய்காட் லால் சிங் சத்தா என்ற ஹேஷ்டேக்குகளை ஹிந்துக்கள் ட்ரெண்டாக்கினர்.

இதையடுத்து, நான் ஹிந்துக்களுக்கு எதிரியல்ல, நாட்டுக்கும் எதிரியல்ல, நானும் தேசப்பற்று மிக்கவன்தான் என்றெல்லாம் புலம்பித்தள்ளிய அமீர்கான், தயவு செய்து என்னுடைய படத்தை புறக்கணிக்காதீர்கள் என்று ஹிந்துக்களிடம் கெஞ்சினார். அதேபோல, அப்படத்தின் கதாநாயகியான கரீனா கபூரும் கெஞ்சி கேட்டுக்கொண்டார். ஆனாலும், ஹிந்துக்கள் தங்களது கொள்கையில் உறுதியாக இருந்தனர். இதனால், லால் சிங் சத்தா திரைப்படம் படுதோல்வியைச் சந்தித்தது. இது அமீர்கானுக்கு சரியான பாடத்தை புகட்டியது. இதன் பிறகுதான், ஹிந்துகளின் பலம் என்ன என்பது அமீர்கானுக்குப் புரியவந்தது. இதனால், ஹிந்து வெறுப்பை மூட்டை கட்டி வைத்தார்.

இந்த நிலையில்தான், தனது புதிய அலுவலகத்தில் ஹிந்து முறைப்படி பூஜைகளை செய்திருக்கிறார் அமீர்கான். அதாவது, லால் சிங் சத்தா படம் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, சிறிது காலம் நடிப்புக்கு மூட்டை கட்டி வைப்பதாக நடிகர் அமீர்கான் அறிவித்திருந்தார். ஆகவே, நடிப்புக்கு பதிலாக திரைப்படங்களை தயாரிக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி, மும்பையில் ‘அமீர்கான் புரொடக்ஷன்ஸ்’ என்கிற பெயரில் புதிதாக ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார் அமீர்கான். இந்த அலுவலக திறப்பு விழா கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்தது.

இந்த விழாவில்தான், ஹிந்து முறைப்படி சிறப்பு பூஜையை நடத்தி இருக்கிறார் அமீர்கான். இதற்காக நெற்றியில் திலகமிட்டு, தலையில் நேரு தொப்பி, கழுத்தில் துண்டு அணிந்து, கலசத்தை தலையில் வைத்து மிகவும் நேர்த்தியாக பூஜை செய்திருக்கிறார் அமீர்கான். பின்னர், தனது முன்னாள் மனைவி கிரண் ராவுடன் இணைந்து ஆரத்தியும் காட்டுகிறார். இந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களை லால் சிங் சத்தா திரைப்படத்தின் இயக்குனர் அத்வைத் சந்தன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள்தான் தற்போது சமூக வலைத்தங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து விட்டு, பலரும் அமீர்கானின் இந்த அதிரடி மாற்றத்துக்குக் காரணம், ஹிந்துக்கள் அடித்த அடி அப்புடி என்று கிண்டல் செய்து வருகின்றனர். எப்படியோ அமீர்கான் திருந்தினால் சரி!


Share it if you like it