பாடலுக்கெல்லாம் சாரதி… அவர்தான் பாரதி!

பாடலுக்கெல்லாம் சாரதி… அவர்தான் பாரதி!

Share it if you like it

திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் 1882-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி பிறந்தார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். சிறு வயதிலேயே ஆற்றல் மிக்க கவிதைகளால் மக்கள் மனதை வென்றார் ஆகவே தன் 11-ம் வயதிலேயே பாரதி என்னும் பட்டப் பெயரால் மக்களால் போற்றப்பட்டவர் இவர்.

” அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொறு காட்டிவோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தனிந்தது காடு – தழல்
வீரத்திற் குஞ்சென்று முப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் “

என்னும் தன் பாடலுக்கு இணங்க தன் சிறு வயதிலேயே அக்னி குஞ்சாய் கவிதைகளை சொல்லி வியக்க வைத்தவர் மகாகவி பாரதி.

தன் சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர் பிறகு தன் அத்தையுடன் காசிக்கு சென்று அங்கு ஜெயநாராயணன் இன்டர்மீடியேட் கல்லூரியில் சேர்ந்து ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை கற்றுத் தேர்ந்தார். காசியில் நடைபெற்ற பல்வேறு அரசியல் கூட்டங்கள் மற்றும் மேடை பேச்சுகளை கேட்டு வளர்ந்த பாரதி அதன் விளைவாக தன் தாய் நாடு ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இழிவான நிலையில் இருப்பதை உணர்ந்தார்.

தன் படிப்பை முடித்த பின் எட்டயபுர அரண்மனையில் வேலைக்கு சேர்ந்தார் பாரதி. பின் தற்காலிக தமிழ் ஆசிரியராக மதுரையில் உள்ள சேதுபதியின் உயர் பள்ளியில் பணியாற்றினார். வங்காளம் இரண்டாக பிளவு பட்டபோது நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பியது. அச்சமயம் தம் எதிர்ப்பை கட்டுரை வாயிலாக வெளியிட்டார். வங்காளத்தில் உள்ள இந்துக்களை வந்தே மாதரம் என்று பாடல் ஒன்றிணைத்தது. இப்பாடலை தம் தாய் மொழியான தமிழில் மொழிபெயர்த்து தமிழகம் முழுவதும் “வந்தே மாதரம்” என்னும் பாடலை ஒலிக்க செய்தவர் மகாகவி பாரதி.

இந்தியா என்னும் பத்திரிகையில் இணைந்து தம் கட்டுரையின் வாயிலாக சென்னையில் உள்ள மக்களின் மனதில் விடுதலை என்னும் தீயை ஏற்றி வைத்தவர் பாரதி. ஆங்கிலேயர்கள் பாரதியை பார்த்து பயந்ததை விட அவரின் புரட்சி மிக்க எழுத்துக்கள் கட்டுரைகள் கவிதைகள் பேச்சில் உள்ள வீரத்தை பார்த்தே பயந்து பாரதியை கைது செய்ய முற்பட்டனர். தன் தாய் நாட்டின் மீது கொண்ட காதலாலேயே ” பராசக்தி” என்று தன் தாய் நாட்டை போற்றியவர் பாரதி.

” சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்.
வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே? “

தம் பாரதி வல்லமை கேட்டது, தன் வாழ்க்கையை வளமாக வாழ்வதற்கு அல்ல நம் நாட்டு மக்கள் வல்லமையுடனும் வளமுடன் வாழ்வதற்கே!

சிற்றரசர்கள், ஜமீன்தார்கள் சமஸ்தானங்கள்,என கிழிந்து கடந்த நம் பாரத நாட்டை தன் துப்பாக்கி முனையில் வைத்து ஆட்சி செய்து வந்தான் வெள்ளைக்காரன். அந்த நேரத்தில் இந்தியாவிற்கு, இந்தியா என்னும் பெயர் தான் புதிது. அடிமைத்தனம் அல்ல. நம் மக்கள் அனைவரின் உடம்பில் அடிமை ரத்தம் ஓடிக்கொண்டிருந்த தருணம் அது. “தண்டுகள் அழுகிவிடலாம் அற்று போகாத தாமரையின் இலைகள் போல ” எந்த ஆதிக்கத்திலும் தன் விடுதலை சிந்தனைகளை மக்களிடையே எடுத்துச் சொல்ல தயங்கியது இல்லை நம் வீரபாரதி. அவன் இரு கண்கள் சூரியன் சின்னமாய் திகழ்ந்தன. பாரதம் சுதந்திரம் தேசியம் என்னும் மூன்று புதிய சொற்களை தமிழக முழுவதும் முழக்கமிட்டவன் நம் பாரதி.

அவன் ஒரு சித்திரைப் போல இருப்பான்,
ஆனால் சித்தர் அல்ல,
அவன் ஒரு பித்தனை போல திரிவான்,
ஆனால் பித்தன் அல்ல,
இந்த நாட்டின் வீர மரபையும் ஞானப் பெருமையும் தட்டி எழுப்பிய வீர ஜித்தன் எம் பாரதி
” ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமே”
என சுதந்திரம் அடைவதற்கு முன்பே நம் பாரத மக்களிடையே சுதந்திர இன்பத்தை பதித்தவன் பாரதி.

” மொழியினால் தன் தேவையை பூர்த்தி செய்பவன் கவி
மொழியால் காலத்தின் தேவையை ஈடு செய்பவன் மகாகவி “
எம் பாரதி மகாகவி ஆவார்.

1921-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி மரணத்தை தழுவினார் பாரதி. திருவல்லிக்கேணி மயானத்தில் பாரதியின் உடலை சிற்று தீட்டி அணைத்திருக்கலாம். ஆனால் அவனின் வீர கவிதைகள் கொளுத்தியத்தி அணைவதில்லை. அது யுக அக்னியாய் மக்களின் மனதில் எரியும்.

ஓம்பிரகாஷ்.


Share it if you like it