144 தடை உத்தரவை மதிக்காமல் கூடாரத்தை களைத்த பின்னும் காவல்துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய CAA போராளிகள்!

144 தடை உத்தரவை மதிக்காமல் கூடாரத்தை களைத்த பின்னும் காவல்துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய CAA போராளிகள்!

Share it if you like it

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக, டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் அர்த்தமற்ற போராட்டத்தை, எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பெயரில் இஸ்லாமியர்கள் போராடினர். போராட்டம் நாளுக்கு நாள் வழுவிழந்து, சொற்ப மக்களே போராட்டத்தில், கலந்து கொண்டனர். இந்நிலையில் கொரோனா தனது கோர முகத்தை, இந்தியாவில் காட்டிய நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு பல்வேறு, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன் விளைவாக டெல்லி முழுவதும், 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து டெல்லி காவல்துறையினர், புல்டோசர்களை கொண்டு கடந்த, ஆண்டு டிசம்பர் முதல் டெல்லி-நொய்டா, சாலையின் வழிகளை, மறித்து நிறுத்தியிருந்த அனைத்து தடைகளையும் இடித்து தள்ளி அப்புறப்படுத்தினர்.

மேலும் ஷாஹீன் பாக் பகுதியில் இருந்த கூடாரங்களை அப்புறப்படுத்தி மக்களை வெளியேறு மாறு காவல்துறை அறிவுறுத்தியது. ஆனால் அடிப்படை இஸ்லாமியர்களின் தூண்டுதலில் செயல்படும், அப்பாவி மக்கள் ஒன்றாக கூடி காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கொரோன தொற்றின் தாக்கத்தை உணராமல், போராட்டக்காரர்கள் தொடர்ந்து காவல்துறைக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர். டெல்லி மெட்ரோ மார்ச் 31 வரை மூடப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it