இந்தியாவின் வளர்ச்சி குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா வெகுவாக புகழ்ந்து தள்ளி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சவாலான சூழ்நிலையை நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் மந்த நிலை உருவாக்கியுள்ளதால் வளர்ச்சி கடினம் தான். கடந்த ஆண்டின் 3.4%-ல் இருந்து இந்த ஆண்டு 2.9%-மாக குறையும் என அனுமானிக்கிறோம். சற்று வளர்ச்சி ஏற்பட்டு பணவீக்கம் குறைவதை பார்க்கிறோம். அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவை மீண்டு வருகின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகள் நல்ல நம்பிக்கையை தந்துள்ளன.
பணவீக்க உயிர்விலிருந்து விடுபடும் சூழ்நிலையை காண்கிறோம். ஆனால், நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. மத்திய வங்கிகளின் தலைவர்கள் மற்றும் நிதி அமைச்சர்கள் சரியான நிதி கொள்கைகளை வகுப்பது முக்கியம். ஏன்? இதில் இந்தியா பிரகாசமான பொருளாதாரமாக தெரிகிறது என்றால் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்திய முன்னோடியாக உள்ளது. இதன் மூலம் கோவிட் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீண்டுள்ளன. வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் பெருகுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.