கிறிஸ்தவம் நரகத்தை போதித்தது: ஹிந்து மதம் அன்பை காட்டியது – அமெரிக்க எழுத்தாளர் நெகிழ்ச்சி!

கிறிஸ்தவம் நரகத்தை போதித்தது: ஹிந்து மதம் அன்பை காட்டியது – அமெரிக்க எழுத்தாளர் நெகிழ்ச்சி!

Share it if you like it

பிரபல அமெரிக்க எழுத்தாளர் ரெனீ லின் ஹிந்து மதத்தை வெகுவாக பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர், சமூக ஆர்வலர், ஆசிரியர் எனும் பன்முகத் தன்மை கொண்டவர் ரெனீ லின். இவர், இந்தியர்கள் மீதும் ஹிந்துக்கள் மீதும் அளவு கடந்த அன்பு கொண்டவர். ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகளை உயர்த்தி பேசக்கூடியவர். இந்தியாவிற்கு, எதிராக யாரேனும் கருத்து தெரிவித்தால் உடனே அதனை கண்டிக்கும் நபராகவும் இருக்க கூடியவர். பிறப்பால் நான் அமெரிக்கன், இதயத்தால் நான் இந்தியன். இந்தியா எனது வீடு என்று கூறியவர்.

இப்படிப்பட்ட சூழலில், ரெனீ லின் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் ;

நான் கிறிஸ்தவராக வளர்ந்தேன். அங்கு, எங்களுக்கு நரகம் குறித்து கற்பிக்கப்பட்டது. இதனிடையே, ஹிந்துமதம் மற்றும் அதன் மதிப்பு குறித்து நான் அறிந்து கொண்டேன். இந்து மதத்தில் தர்மம் செய், சமூகத்திற்கு சேவை செய், சமுதாயத்திற்கு திருப்பி கொடு என்று கூறுகிறது. வன்முறையற்ற வாழ்க்கை நெறி ஆகியவற்றை நான் அங்கு கற்றுக்கொண்டேன். நான் பிறப்பால் கிறிஸ்தவர், இதயத்தால் நான் ஒரு இந்து என குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it