விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் நடந்த அத்துமீறல்களை பார்த்து, தேசிய குழந்தைகள் நல ஆணையம் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் அன்புஜோதி என்கிற பெயரில் ஆசிரமம் இயங்கி வந்தது. இந்த ஆசிரமத்தை கேரளாவைச் ஜுபின் பேரி, மரியா தம்பதி நடத்தி வந்தனர். 2004-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த ஆசிரமத்தில், பல்வேறு அத்துமீறல்கள் நடப்பதாக ஏராளமான புகார்கள் குவிந்தன. எனினும், பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சூழலில், ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட முதியவரை காணவில்லை என்று ஒருவர் கோர்ட்டில் ஹேபியஸ் கார்ப்பஸ் மனு தாக்கல் செய்ததோடு, போலீஸிலும் புகார் செய்ததால் விவகாரம் விஸ்ரூபம் எடுத்தது.
இதையடுத்து, அன்புஜோதி ஆசிரமத்தில் நடந்த சோதனையில், ஒருவர் மட்டுமல்ல 15-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. மேலும், ஆசிரமத்தில் இருந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், போதை மருந்து கொடுக்கப்பட்டதும் அம்பலமானது. இதைத் தொடர்ந்து, ஆசிரம நிர்வாகிகள் ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா உட்பட 9 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கக் கூடிய ஏராளமான மாத்திரைகள், அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆசிரமத்தில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், முதியோர் ஆகியோர் வேறு இடங்களிலுள்ள காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில்தான், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது தேசிய குழந்தைகள் நல ஆணையம். இதைத் தொடர்ந்து, மேற்படி ஆணையத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் அன்புஜோதி ஆசிரமத்தில் நேரடியாக ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், நோயாளிகளின் கை, கால்களை உடைத்து முடமாக்கியது, போதை மருந்து கொடுத்த மதம் மாற்றியது உள்ளிட்ட மேற்கண்ட ஆசிரமத்தில் நடந்த அத்துமீறல்கள் தேசிய குழந்தைகள் நல ஆணைய நிர்வாகிகளை மலைக்க வைத்திருக்கிறது. இது குறித்த முழு தகவல்களையும் தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்…