இந்த விஷயத்தை செய்தால் பா.ஜ.க.வை நாங்கள் ஆதரிப்போம் கேரள பிஷப்  கருத்து!

இந்த விஷயத்தை செய்தால் பா.ஜ.க.வை நாங்கள் ஆதரிப்போம் கேரள பிஷப் கருத்து!

Share it if you like it

விவசாயிகள் விஷயத்தில் சாதகமான முடிவு எடுத்தால் பா.ஜ.க.வை நாங்கள் ஆதரிப்போம் என கேரள பிஷப் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் ரப்பர் உட்பட வேளாண் பொருட்களின் விலை குறைந்துள்ளது. இதனை, கண்டித்து கண்ணூர் மாவட்டம் அலகோட் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் தலச்சேரி மலபார் கத்தோலிக்க சர்ச் ஆர்ச் பிஷப் ஜோசப் பம்ப்லேனி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது ;

கேரளாவில் ரப்பர் உட்பட வேளாண் பொருட்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு ஏற்பது? மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ரப்பர் விவசாயிகள் விஷயத்தில் சாதகமான முடிவெடுத்தால் விலையை உயர்த்த முடியும். அந்தக் கட்சிக்கு மலபார் கிறிஸ்தவர்கள் வாக்களிப்பார்கள். நீங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, ரப்பர் விலையை ரூ.300 ஆக உயர்த்தினால் நாங்கள் உங்கள் கட்சிக்கு வாக்களிக்க தயார்.

நாங்கள் எந்தக் கட்சிக்கும், அரசுக்கும் எதிரானவர்கள் அல்லர். ஆனால், விவசாயிகள் பாதுகாப்பாக உயிர் வாழ சம்பந்தப்பட்டவர்கள் உறுதி செய்ய வேண்டும். கேரளாவில் பா.ஜ.க.வுக்கு ஒரு எம்.பி. கூட கிடையாது. இந்த நிலையில், இங்கு குடியேறிய விவசாயிகளுக்கு பா.ஜ.க. பாதுகாப்பு அளித்தால், அனைவரும் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பார்கள். இதன்மூலம், கேரளாவில் பா.ஜ.க.வுக்கு எம்.பி. இல்லை என்ற குறையை விவசாயிகள் தீர்த்து வைப்பார்கள் என கூறினார்.


Share it if you like it