‘ஈசன்தான் இயேசு’: திருமாவளவனின் புது உருட்டு!

‘ஈசன்தான் இயேசு’: திருமாவளவனின் புது உருட்டு!

Share it if you like it

ஈசன்தான் இயேசு. கிறிஸ்தவம் என்பது தமிழர்களின் ஹிந்து மதம் என்று திருமாவளவன் கூறியிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். தமிழகத்தின் சிதம்பரம் தொகுதியின் எம்.பி.யாக இருக்கிறார். இவரது சகோதரி பானுமதி கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்ட நிலையில், (இவர் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காரணமாக உயிரிழந்து விட்டார். இவரது உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் அங்கனூருக்கு கொண்டு செல்லப்பட்டு, கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது), திருமாவளவனும் கிறிஸ்வத மதத்திற்கு மாறிவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில், தான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விட்டதாகவும், இஸ்லாத்துக்கு மாறிவிட்டதாகவும் கூறியிருக்கிறார். அதேபோல, புத்த மதத்தை தழுவிட்டதாகவும் கூறியிருக்கிறார். உண்மையில் எந்த மதத்துக்கு மாறினார் என்பது தெரியவில்லை. ஆனால், ஹிந்து தெய்வங்களையும், ஹிந்து கோயில்களையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருகிறார். கேட்டால், நான் ஒரு ஹிந்து. எனது மதத்தை விமர்சிக்க எனக்கு உரிமை இல்லையா என்று எதிர் கேள்வி எழுப்புவார்.

இந்த நிலையில்தான், கிறிஸ்தவ மதம்தான் தமிழகத்தின் ஹிந்து மதம் என்று கூறி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். ஒரு கூட்டத்தில் பேசிசும் திருமாவளவன், “கபாலீஸ்வரர் என்கிற பெயர் இயேசு கிறிஸ்துவைத்தான் குறிக்கும். அதேபோல, மரணத்தை வென்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், ஒற்றைக் காலில் நின்று ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். அதுதான் சிதம்பரத்தில் தலைமை கோயிலாக இருக்கிறது. ஈசன் என்பதுதான் இயேசு என்றாகி ஜீசஸ் என்று மறுவி இருக்கிறது. ஆகவே, கிறிஸ்தவம் என்பது தமிழர்களின் ஹிந்து மதம்தான்” என்று கூறியிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சி எப்போது, எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால், திருமாவளவன் இவ்வாறு பேசியிருக்கும் இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் என்ன கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றான் பாருங்க என்றும், அதென்ன தமிழகத்தின் ஹிந்து மதம். அப்போ மற்ற மாநிலங்களில் இருக்கும் ஹிந்து மதமெல்லாம் என்ன என்று கேள்வி எழுப்பியும், திருமாவளவனை கேலி, கிண்டல் செய்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Share it if you like it