காலிஸ்தான் பயங்கரவாதிகள் நம் தேசத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க இந்துக்களுக்கு எதிராக சீக்கிய இளைஞர்கள் மனதில் வெறுப்பை விதைத்து வருகின்றனர். இன்று பல சீக்கியர்கள் இந்து மதத்திற்கும் சீக்கிய மதத்திற்கும் இடையில் வேறுபாடுகளை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களுக்கு இந்துக்கள் மீது பழி சுமத்துவது முதல், இந்துக்கள் எப்போதுமே சீக்கிய குருக்களை குறிவைத்துள்ளனர் என்று சொல்வது வரை, காலிஸ்தான் பயங்கரவாதிகள் எப்போதுமே இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையே பிளவை உருவாக்கி வருகின்றனர்.
இதற்கு சில இந்து விரோத கதைகளைப் பயன்படுத்துகின்றனர். அதனால்தான் சீக்கிய சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரிடையே இந்துக்கள் மீதான கோபம் அதிகரித்து வருகிறது. இந்த சதியை முறியடிக்க உண்மையான வரலாற்றை சீக்கியர்களுக்கு தெரியப்படுத்துவது அவசியம். கடந்த காலத்தில் முகலாயர்களிடமிருந்து இந்துக்கள் சீக்கியர்களை எவ்வாறு பாதுகாத்தனர் என்பதைப் பற்றி அவர்களுக்கு எடுத்து கூற வேண்டும்.
அதற்கான சில வரலாற்று உதாரணங்களை இனி பார்ப்போம். ஆம்பர் மன்னர் ஜெய் சிங் டில்லியில் உள்ள பாபா கரக் சிங் மார்க்கில் அமைந்துள்ள சீக்கியர்களின் முக்கிய வழிபாட்டு தலமான பங்களா சாஹிப் குருத்வாராவை நம் அனைவருக்கும் தெரியும். நாட்டில் உள்ள மற்ற குருத்வாராக்களைப் போலல்லாமல், குருத்வாரா பங்களா சாஹிப் முதலில் ஒரு வழிப்பாட்டு தலமாக இருக்கவில்லை. குருத்வாரா பங்களா சாஹிப் உண்மையில் ஆம்பர் ராஜ்ஜியத்தின் (பின்னர் ஜெய்ப்பூர் என அறியப்பட்டது) சக்திவாய்ந்த இந்து மன்னர் ராஜா ஜெய் சிங்கின் அரண்மனை ஆகும்.
1661-ல் எட்டாவது சீக்கிய குருவான குரு ஹர் கிருஷ்ணனுக்கு 6 வயதாக இருக்கும் போது அவரை டில்லிக்கு வரும்படி முகலாய கொடுங்கோல் அரசரான ஔரங்கசீப் உத்தரவிட்டார். இந்த சம்மனை மீறினால் மரண தண்டனை என்று தெரிந்தும் குரு ஹர் கிருஷ்ணன் டில்லிக்கு செல்ல மறுத்தார். அந்த சமயம் ராஜபுத்திர மன்னன் ராஜா ஜெய் சிங், குருவின் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து, குழந்தை குருவைப் பாதுகாக்க தனிப்பட்ட முறையில் கிராத்பூருக்குச் சென்றார்.
அவரை பாதுகாப்புடன் டில்லிக்கு அழைத்து செல்வதாக உறுதி அளித்தார். ஆனால் குருவின் தாயாரான குருமாதா கிருஷ்ணன் கவுர் அவருடைய உதவியை ஏற்கவில்லை. “நாங்கள் போகமாட்டோம். முகலாயர்களை நாங்கள் நம்பவில்லை. அவர்களிடமிருந்து இருந்து எந்த நல்லதும் வருவதில்லை’’ என்று வெளிப்படையாகச் கூறினார்.
அவரது அச்சத்தை புரிந்து கொண்ட மன்னர் ஜெய் சிங் குருவை எந்த விலை கொடுத்தாலும் பாதுகாப்பதாக உறுதி அளித்தார். “அம்மா, குருவின் பாதுகாப்புக்கு நான் பொறுப்பேற்கிறேன். அவர் எனக்கு விருந்தாளியாக வருவார். நான் ராஜபுத்திரன். இது ராஜபுத்திரனின் வாக்கு. குருவின் தலை முடியை கூட யாரையும் தொட விடமாட்டேன். அவரை பாதுகாக்க என் உயிரைக் கொடுப்பேன். அதற்கு நான் எப்போதும் அவருக்கு பக்கபலமாக இருப்பேன்’’ என்று உறுதிமொழி அளித்தார்.
ராஜா ஜெய் சிங்கின் உறுதிமொழிக்குப் பிறகு, மாதாவும் குருவும் அவரை நம்பினார்கள். அதன் பிறகு குரு ஹர் கிருஷ்ணன் மன்னர் ஜெய் சிங்குடன் டில்லி சென்றார். ஜெய் சிங் அவர் கொடுத்த வாக்குறுதியை பின்பற்றி குருவுக்கு முழு பாதுகாப்பு அளித்து அவரது தூதுவராக செயல்பட்டார். குருவின் சார்பாக ஔரங்கசிப்பிடம் பேசினார். ஔரங்கசீப் குருவின் மேல் தன் பார்வையை கூட வைக்கவில்லை என்பதை ஜெய் சிங் உறுதி செய்தார்.
குரு ஹர் கிருஷ்ணன் டில்லியில் இருந்தபோது, ராஜா ஜெய் சிங் டில்லியின் புறநகரில் உள்ள தனது அரண்மனையில் குருவை தங்க வைத்தார். அங்கு குரு மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட்டார். எல்லா வசதிகளும் அவருக்கு அளிக்கப்பட்டது. குருவின் மறைவுக்குப் பிறகு, இந்த அரண்மனை சீக்கியர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது. பின்னர் அது குருத்வாரா ஆனது.
பாய் சிங்க புரோஹித் மன்னர் ஜெய் சிங் போன்ற ராஜபுத்திரர்கள் மட்டுமல்ல, பல பிராமணர்களும் சீக்கிய குருக்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரைக் கொடுத்துள்ளனர்.
அதில் ஒருவர் தான் பாய் சிங்க புரோஹித். முகலாயர்கள் ஸ்ரீ அமிர்தசரஸ் சாஹிப் ஜி நகரைத் தாக்கியபோது, குரு ஹர்கோவிந்த் சாஹிப்பின் குடும்பம் நகரத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும், அவர்கள் ராம்சர் சாஹிப்பை அடைந்தபோது, குரு ஹர்கோவிந்த் சாஹிப்பின் மகள் பீபி வீரோவைக் காணவில்லை என்பது அவர்களுக்குத் தெரியவந்தது. அப்போது அவள் ஒரு குழந்தை. அந்தச் சூழ்நிலையில், பாய் சிங்க புரோஹித், முகலாய ராணுவ வீரர் போல் மாறுவேடமிட்டு, அமிர்தசரஸில் நுழைந்து பீபி வீரோவைக் காப்பாற்றினார்.
குருவைப் பாதுகாக்கும் பணியில் தன் உயிரையும் கொடுத்தார்.
ராஜா தாராசந்த் குரு ஹர் கோவிந்த் முகலாயர்களால் தாக்கப்பட்டபோது, அவர் பஞ்சாப் சமவெளியை விட்டு மலைகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது கல்லூர் ராஜா தாராசந்த் குரு ஹர் கோவிந்தை வரவேற்று பாதுகாத்தார். அவர் ஷாஜகானுக்கு மரியாதை செலுத்தவில்லை. ராஜா தாராசந்த் முகலாயர்களுக்கு அடிபணியவில்லை. முகலாயர்களிடமிருந்து குருவுக்கு அவரது ராஜ்ஜியம் முழு பாதுகாப்பை வழங்கியது. ராஜா தாராசந்த் பின்னர் குருவுக்காக தன் நிலத்தை தானம் செய்தார் . சுர்ஜித் சிங் மற்றும் ஹர்தீப் சியான் போன்ற சீக்கிய வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, கிரத்பூர் சாஹிப் ராஜா தாராசந்த் வழங்கிய நிலத்தில் தான் கட்டப்பட்டது.
ராஜா ராம் சிங் குரு தேக் பகதூர் ஔரங்கசீப்பால் கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்படவிருந்தபோது, இந்து இளவரசர் ராஜா ராம் சிங் அவரது விடுதலைக்காக ஔரங்கசீப்பிடம் வேண்டுகோள் விடுத்தார். அவரது முயற்சியால் குரு தேக் பகதூர் விடுதலை செய்யப்பட்டார்.
இதேப்போல் கடந்த 1700 ஆம் ஆண்டில், முகலாயர்கள் ஆனந்த்பூர் சாஹிப்பைத் தாக்கியபோது, குரு கோவிந்த் சிங் தனது இடத்தை விட்டு வெளியேறி குட்லேஹரில் பாதுகாப்பைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது குரு மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருந்தார்.
அந்த நேரத்தில் சீக்கியர்களை முகலாயர்களிடம் ஒப்படைக்கும்படி குட்லேஹரின் ராஜாவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் முகலாயர்களின் உத்தரவை ஏற்காத, ராஜா, குருவை முகலாயர்களிடமிருந்து பாதுகாத்தார். இந்த ஒழுக்கமின்மைக்காக, முகலாயர்கள் குட்லஹேர் ராஜாவைத் தண்டித்தார்கள். அவரது ஜாகிர் குறைக்கப்பட்டது. குரு கோவிந்த் சிங் மறைந்த பிறகு, டில்லியில் உள்ள குருவின் மனைவியின் வீடு சூறையாடப்பட்டது. அதனால் அவர்கள் டில்லியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது சவாய் ஜெய் சிங் தான் குருவின் மனைவி மற்றும் குடும்பத்தை முகலாயர்களிடமிருந்து பாதுகாத்து அவர்களுக்கு மதுராவில் ஒரு நல்ல வீட்டையும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உதவித்தொகையையும் வழங்கினார்.
இப்படி வரலாற்றை திரும்பி பார்த்தால் எத்தனையோ இந்துக்கள் சீக்கிய குருக்களை தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பாதுகாத்து வந்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆனால் காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்த உண்மைகளை மூடி மறைத்து மக்கள் மனதில் பிரிவினைவாதத்தை தூண்டி வருகிறார்கள். இந்த உண்மைகள் வெளிவந்தால் மட்டுமே காலிஸ்தான் பயங்கரவாதிகளின் சதிவேலைகள் முறியடிக்கப்படும். தேசத்தின் ஒற்றுமை பாதுகாக்கப்படும்.