EPS யும் இல்ல OPS யும் இல்ல எப்பவும் IPS தான் ! நச் பதில் கொடுத்த விஷால் !

EPS யும் இல்ல OPS யும் இல்ல எப்பவும் IPS தான் ! நச் பதில் கொடுத்த விஷால் !

Share it if you like it

தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் பாஜகவானது அசுர வளர்ச்சி அடைந்து வருவதை அண்ணாமலை அவர்களின் யாத்திரையின் மூலம் நாம் அறிய முடியும். திமுகவுக்கு எதிர்க்கட்சியாக அதிமுக என்கிற காலம் சென்று தற்போது திமுகவையே வீழ்த்தும் அளவிற்கு டஃப் கொடுக்கும் வகையில் பாஜக உருவெடுத்துள்ளது. முன்னதாக ஸ்டாலின் எப்போதும் எடப்பாடி பற்றி விமர்சனம் செய்வார். ஆனால் இப்போது எதற்கெடுத்தாலும் அண்ணாமலையை தான் விமர்சனம் செய்கிறார். இதில் உதயநிதி அண்ணாமலையை பற்றி கேள்வி எழுப்பினாலே ஓட்டம் எடுத்து விடுவார். இவ்வாறு திமுகவின் கண்ணிலே விரலை விட்டு ஆட்டி கொண்டிருக்கிறார் அண்ணாமலை.

இந்நிலையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் திரைப்பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஷாலும் சமுத்திரக்கனியும் கலந்து கொண்டு பேசினர். அப்போது இளைஞர் ஒருவர் விஷாலிடம் நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் தெளிவாக பதிலை சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு, தேர்தலில் உங்களுடைய ஆதரவு EPS க்கா இல்லை OPS க்கா ? என்று கேட்டார். அதற்கு உடனே சற்றும் யோசிக்காமல் IPS க்கு என்று கூறினார். இதனால் அங்கிருந்தவர் கைதட்டி விசிலடித்தனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் IPS அதிகாரியாக சிறப்பாக செயல்பட்டு கர்நாடகா சிங்கம் என்று பெயரெடுத்தவர். அண்ணாமலையத்தான் விஷால் IPS என்று கூறியுள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *