எதிர்வரும் ஏப்-23-ஆம் தேதி ராமருக்கு ஐல அபிஷேகம் செய்ய உ.பி. அரசு திட்டமிட்டுள்ளதாக தற்போது செய்தி வெளியாகி இருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் அயோதியில் தற்போது ராமர் கோவில் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து அனைத்து தரப்பு மக்களும் ராமர் கோவில் கட்டும் பணிக்கு தங்களால் இயன்ற பண உதவிகளை செய்தனர். அதன்அடிப்படையில், கோவில் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
அடுத்த ஆண்டிற்குள் ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி முடித்து விட வேண்டும் என உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், எதிர்வரும் ஏப்-23-ஆம் தேதி ராமருக்கு ஐல அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 155 நாடுகளில் இருந்து புனிதநீர் கொண்டு வரும் பணியை யோகி அரசு மேற்கொண்டுள்ளது.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.