தமிழகத்தில் ஓசி பஸ் விவகாரம் ஓய்ந்தபாடில்லை. பெண்களுக்கு ஓசி என்பதால் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் ஏற்ற மறுப்பதாக பெண் தொழிலாளர்கள் குமுறி வருகின்றனர்.
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு அறிவித்தது. ஆனால், பெண்களை இலவசமாக அழைத்துச் செல்வதால் தங்களுக்கு கலெக்ஷன் படி குறைவதாகக் கூறி, டிரைவர்களும், கண்டக்டர்களும் பெண்களை பஸ்ஸில் ஏற்றுவதில்லை என்கிற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்து வருகிறது. அதேபோல, பெண்கள் இலவச பயணம் செய்வதால், பேருந்தில் வரும் ஆண்களுக்கு இருக்கைகளை வழங்குவதாகவும் பெண்களை நின்று கொண்டே வருமாறு வற்புறுத்துவதாகவும் புகார்கள் இருந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, பெண்கள் பஸ்சில் இவவசமாக பயணம் செய்வதை ஓசி பஸ் என்று அமைச்சர் பொன்முடி கிண்டல் செய்தார். இதன் பிறகு அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களுக்கு மரியாதையே இல்லாமல் போய் விட்டது.
இந்த நிலையில்தான், இலவச பயணம் என்பதால், பெண் கூலித் தொழிலாளர்களைக் கூட டிரைவர், கண்டக்டர்கள் பஸ்ஸில் ஏற்ற மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கடலூர் மாவட்டம் புவனகிரியில்தான் ஓசி டிக்கெட் என்று கூறி, பெண் கூலித் தொழிலாளர்களை அரசுப் பேருந்தில் ஏற்ற மறுத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதாவது, கட்டுமானப் பணிக்கு சென்று திரும்பிய பெண் கூலித் தொழிலாளிகள் புவனகிரியில் புதிய பாலம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, குறிஞ்சிப்பாடி செல்லும் அரசுப் பேருந்து வந்திருக்கிறது. உடனே, பெண் கூலித் தொழிலாளிகள் அப்பேருந்தில் ஏற முயன்றிருக்கிறார்கள்.
இதைக்கண்ட கண்டக்டர் ஓசி டிக்கெட் என்று அப்பெண்களை திட்டயதோடு, பேருந்தை சற்று தள்ளி நிறுத்துமாறு கூறவே, டிரைவரும் தள்ளி நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுச் சென்றிருக்கிறார். இது பெண் கூலித் தொழிலாளிகள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து பெண் கூலித் தொழிலாளிகள் வேதனையும் கூறும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது அக்காணொளி…