கிறிஸ்தவர்கள் அத்தி இயேசுவில் தொடங்கி தற்போது சூரசம்ஹார இயேசுவில் வந்து நிற்கிறார்கள்.
ஹிந்துவாக இருந்து கிறிஸ்தவர்களாக மாறியவர்களின் அல்லப்பறைகளுக்கு அளவில்லாமல் போய் விட்டது. ஹிந்துக்களில் என்னென்ன பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறதோ, அப்பண்டிகைகள் அனைத்தையும் கிறிஸ்தவத்தில் புகுத்தி வருகிறார்கள். ஹிந்துக்கள் பொங்கல் பண்டிகையை கிறிஸ்தவர்களும் கொண்டி வருகிறார்கள். என்ன வித்தியாசம் என்றால், ஹிந்துக்கள் வீட்டில் ஹிந்து தெய்வங்கள் படம் இருக்கும், கிறிஸ்தவர்கள் வீட்டில் இயேசு படம் இருக்கும். அதேபோல, தீபாவளி பண்டிகையும் இப்படித்தான்.
அவ்வளவு ஏன், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 வருடங்களுக்குப் பிறகு, அமிர்தசரஸ் குளத்திலிருந்து அத்திவரதர் எழுந்தருளினார். உடனே, கிறிஸ்தவர்கள் அத்தி இயேசு என்று சயனகோலத்தில் இயேசுநாதர் இருக்கும் சிலையை செய்து வழிபட்டார்கள். இந்த சூழலில், புதிதாக சூரசம்ஹார இயேசுவை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதாவது, அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழாவின்போது சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும்.
அதேபோல, இயேசுநாதர் அரக்கனை வதம் செய்வதுபோல சூரசம்ஹார விழாவை நடத்தி இருக்கிறார்கள். இது எங்கு நடந்தது? எப்போது நடந்தது? என்பது தெரியவில்லை. ஆனால், இக்காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.