வசந்த காலத்தில் (சித்திரை மாதத்தில்) வருவது புது வருடமா? அல்லது பின் பனி காலத்தில் (தை புது வருடமா?) இயற்கை அன்னையின் பதில் இதோ…
வசந்த காலத்தில் பூ பூத்தல், காய் காய்த்தல், இயற்கை புத்துயிர் பெற்று இருக்கும். ஆனால், தை மாதம் இயற்கை சற்று அமைதியாக பனி காலத்தை கடக்கும். மரங்கள் மட்டும் அல்ல, மீன்கள் இனப் பெருக்கம் காலமும். இதை ஒட்டித்தான், ஆமைகள் முட்டை வைப்பது, பனிக்காலத்தில் பறந்த பறவைகள் வசந்த காலத்தில் தன் இருப்பிடத்திற்கு திரும்பும், இவை இயற்கையின் அடிப்படையில்.
விவசாயத்தின் அடிப்படையில் பார்ப்போம். இப்போது கோடை உளவு அல்லது பொன் ஏர் உளவு என அடுத்த ஆண்டிற்கான வேலையை தொடங்குவார்கள். ஆனால், தை மாதத்தில் அனைத்து வேலைகளும் முடிந்து நன்றி தெரிவிக்கும் பண்டிகை பொங்கல். நாம் ஒரு வேலை தொடங்கும் போது புது வருடமாக இருக்குமா? அல்லது அனைத்து முடிவுற்று நன்றி தெரிவிக்கும் போது இருக்குமா?
சனாதன தர்மத்தில் அனைத்து பண்டிகைகளும் இயற்கையுடன் ஒன்றிணைந்து இருக்கும். இது வெறும் மண்ணில் நாம் கண்களால் எளிதாக பார்த்து புரிந்து கொள்ள கூடியவை. பகலும் இரவும் சரி சமனாக இருப்பது. இதைத் தவிர விண்ணுலகம் அதிசயங்கள் பல. நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் இல்லை. நமது ஹிந்து தர்மத்தை மற்றும் பண்டிகை, அதன் பெருமையை நாம் புரிந்து கொண்டு பாதுகாப்போம்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
கட்டுரையாளர்: வியாஸ்