’உலக சுகாதார அமைப்பை நம்ப முடியாது, கண்ணியமோ, நேர்மையோ, துளியும் இல்லை. WHO சீனாவைப் பாதுகாக்கிறது. என்று ’இமாம் தவ்ஹிடி’ தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கொரோனா தொற்றிற்கு இதுவரை, பல ஆயிரக்கணக்கான அப்பாவி, மக்கள் உயிர் இழந்துள்ளனர். பல லட்சம் மக்கள், இக்கொடிய தொற்றிற்கு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனா வழங்கிய உறுதி மொழியை, (WHO) உலக சுகாதார அமைப்பு நம்பியதன் விளைவு, இன்று உலக நாடுகள், கண்ணீர் சிந்தும் நிலைக்கு, வந்து விட்டது.
கொரோனா வைரஸைப் பற்றி, உலகிற்கு முதலில் எச்சரித்த, சீன மருத்துவர் கொரோனா தொற்று, ஏற்பட்டு உயிர் இழந்ததாக, கூறப்படுகிறது. ஆனால் அவர் மரணத்தில் சந்தேகம், உள்ளதாக மக்கள், கூறிவருகின்றனர்.
ஜின் பிங் அரசின் முட்டாள் தனமான, நிர்வாகம் என சுட்டிக்காட்டிய, சீனாவின் மிகப்பெரிய தொழிலதிபர், முதல் கேள்வி எழுப்பிய பல மக்கள், காணாமல் போய் உள்ளனர்.
இஸ்லாமிய மக்களால் நன்கு, அறியப்பட்டவரும் உலகம் முழுவதும், அமைதி நிலவ வேண்டும் என்று உழைக்க, கூடியவருமான ‘இமாம் முகமது தவ்ஹிடி’ தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
https://twitter.com/Imamofpeace/status/1244435378016153600
”உலக சுகாதார அமைப்பை (WHO) நம்ப முடியாது, என்பதை குறைந்தபட்சம், இப்போது நாம் உணர்ந்துள்ளோம். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுவிட்டார்கள், கண்ணியமோ, நேர்மையோ, துளியும் இல்லை. அவர்களின் தவறான தகவல் பிரச்சாரமும், சீனாவைப் பாதுகாப்பதும். இந்த குழப்பம் எல்லாம் முடிந்ததும். தலைசிறந்த உலக சுகாதார, அமைப்பு நமக்கு தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இமாம் முகமது தவ்ஹிடியின் நியாமான கருத்திற்கு பலர் பாராட்டுகளையும் சிலர் முகமதுவுக்கு கடுமையான எதிர்ப்பினையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.