மோசஸ், ஜீசஸ் இருவரும் யூதர்கள் இல்லை, முஸ்லீம் என்று அமெரிக்காவில் நடந்த போராட்டத்தின்போது முஸ்லீம்கள் கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இயேசு கிறிஸ்து யூதரா, கிறிஸ்தவரா அல்லது முஸ்லீமா என்பது குறித்த சர்ச்சை நீண்ட நாட்களாகவே நிலவி வருகிறது. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள், இயேசு கிறிஸ்து ஒரு இஸ்லாமியர் என்று கூறிவருகின்றனர். இந்த சூழலில், முஸ்லீம் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மோசஸ் யூதர் அல்ல, அவர் ஒரு முஸ்லீம். அதேபோல, ஜீசஸ் யூதர் அல்ல, அவர் ஒரு முஸ்லீம். அப்படி இருக்கையில், ஆப்ரஹாம் நிச்சமயாக யூதராக இருக்க முடியாது. மேலும், கிறிஸ்தவராகவும் இருக்க முடியாது. ஆகவே, அவரும் ஒரு முஸ்லீம்தான்.
அது மட்டுமல்ல, கிறிஸ்தவர்களிடம் பழைய ஏற்பாடு இருக்கிறது. அதேபோல, அவர்களிடம் புதிய ஏற்பாடும் இருக்கிறது. ஆனால், இறுதி ஏற்பாடு இஸ்லாத்தில் மட்டுமே இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்கள். இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த கிறிஸ்தவர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். கிறிஸ்தவ மதம் தோன்றி 2,000 வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், இஸ்லாம் தோன்றி 800 வருடங்களுக்குள் மட்டுமே இருக்கும். அப்படி இருக்க, எப்படி இயேசு கிறிஸ்து முஸ்லீமாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.