கிறிஸ்தவர்கள் மதத்தை பரப்ப உரிமை உண்டாம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பகீர் பதில் மனு!

கிறிஸ்தவர்கள் மதத்தை பரப்ப உரிமை உண்டாம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பகீர் பதில் மனு!

Share it if you like it

ஒவ்வொருவரும் தான் சார்ந்த மதத்தைப் பரப்ப அரசியலமைப்புச் சட்டம் 25 உரிமை கொடுக்கிறது. அந்த வகையில், கிறிஸ்தவ மிஷனரிகள் தங்களது மதத்தை பரப்புவதில் எந்த தவறும் இல்லை என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருப்பது ஹிந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கட்டாய மதமாற்றம் தொடர்பாக, வழக்கறிஞரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அஸ்வினி குமார் உபாத்யாயா, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘மனிதாபிமான உதவி, பொருளாதார உதவி, பரிசு பொருட்கள் வழங்குவது என ஏமாற்றி மத மாற்றம் நடைபெறுகிறது. அதேபோல, மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் மதமாற்றம் செய்வதும் நடக்கிறது. இவற்றை தடுக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். இது தொடர்பாக, அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது.

இதற்கு தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘மதம் என்பது சுதந்திரமானது. எந்த மதத்தை பின்பற்றுவது என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. மேலும், ஒவ்வொருவரும் தான் சார்ந்த மதத்தைப் பரப்ப அரசியலமைப்புச் சட்டம் 25 உரிமை கொடுக்கிறது. அந்த வகையில், கிறிஸ்தவ மிஷனரிகள் தங்களது மதத்தை பரப்புவதில் எந்த தவறும் இல்லை. அதோடு, மதம் சார்ந்த விஷயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது.

நாடாளுமன்றத்திற்குத்தான் அதிகாரம் உள்ளது. மேலும், மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கோருவது, அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது. கட்டாய மத மாற்றத்துக்கு எதிரான சட்டம் கொண்டு வருவது தொடர்பான முடிவுகளை மாநிலத்தின் சட்டமன்றங்களிடம் விட்டு விட வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த கட்டாய மத மாற்றமும் நடைபெறவில்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.


Share it if you like it