கைது என்றாலே அரசியல்வாதிகளுக்கு நெஞ்சு வலி வருவது வழக்கமாகி விட்டது என்று செந்தில்பாலாஜியை மரண பங்கம் செய்திருக்கிறார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், மண் வளமே மக்கள் நலம் என்கிற தலைப்பில் நாகர்கோவிலில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “பால்டாயிலை குடித்து விட்ட சாவதற்கு பதிலாக கள்ளச்சாராயத்தை குடித்து விட்டு இறந்தால் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயாவது கிடைக்கும் என்கிற அவலநிலையில் தமிழகம் இருக்கிறது. ஆனா பாவம், அந்த மகராசனும் முடியாம படுத்திருக்கிறார். இதை எத்தனை தெலுங்கு படத்தில், விஜயகாந்த் படத்தில் பார்த்திருக்கிறோம்.
ஆஸ்பத்திரியில் செக் பண்ணி பார்த்தபோது, இசிஜி இயல்பு நிலையில் இல்லை என்று மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அமைச்சர் செந்தில்பாலாஜியால் நாட்டு மக்களும் கடந்த 2 வருடமாக இயல்பு நிலையில் இல்லை. மின்சாரம் இயல்பு நிலையில் இல்லாததால் ஓடிக்கொண்டிருக்கும் ஏசி திடீரென நின்று விடும். போதாக்குறைக்கு மின்தடை, மின்சார கட்டணம் உயர்வு வேறு. அதேபோல, டாஸ்மாக் கடைகளில் குடித்து விட்டு மக்களும் இயல்பு நிலையில் இல்லை” என்று மரண பங்கம் செய்திருக்கிறார்.