செந்தில் பாலாஜி கைது… சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றிய –  ஸ்டாலின்!

செந்தில் பாலாஜி கைது… சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றிய – ஸ்டாலின்!

Share it if you like it

தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்வார்கள் என அன்றைய தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அதனை மெய்ப்பிக்கும் வகையில், செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை அமைந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2011 முதல் 2016 வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், 2011 முதல் 2015-ம் ஆண்டுவரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. இவரும், இவரது தம்பி அசோக் குமார், உதவியாளர் சண்முகம் உள்ளிட்டோர், போக்குவரத்துத்துறையில் டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமானோரிடம் பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜி நீக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து, அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் ஊழல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதனை, தி.மு.க. மூத்த தலைவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் முன்மொழிந்தனர். இந்த நிலையில் தான், வருமானவரித்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது. தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியில் இதனை மட்டுமே முதல்வர் ஸ்டாலின்நிறைவேற்றியுள்ளார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it