பா.ஜ.க. எம்.எல்.ஏ. பற்றி பொய் செய்தி பரப்பும் உ.பி.ஸ்!

பா.ஜ.க. எம்.எல்.ஏ. பற்றி பொய் செய்தி பரப்பும் உ.பி.ஸ்!

Share it if you like it

அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு எதிராக பொய்ச் செய்தியை பரப்பி வருகிறார்கள் தி.மு.க.வினர்.

கோவை மாவட்டம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த வானதி சீனிவாசன். இவரது அலுவலகத்திற்குள் நேற்று மாலை 6 மணியளவில் மர்ம நபர் ஒருவர் அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அலுவலகத்தில் இருந்த விஜயன் என்பவர், அவரை அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு கூறியிருக்கிறார். அந்த நபர் வெளியேற மறுக்கவே, ஒரு கட்டத்தில் விஜயன் மர்ம நபரை வேகமாக சாலையில் தள்ளி விட்டுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளன.

அதேசமயம், அந்த மர்ம நபர் அலுவலகத்திற்குள் புகுந்தது குறித்து இரவு 8.30 மணியளவில் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் விஜயன். இதனிடையே, அலுவலகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட நபர், கோவை அண்ணா சிலை சிக்னல் அருகே உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். இதுதொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் அரசு போக்குவரத்துக் கழக பஸ்ஸின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதற்கான சி.சி.டி.வி. காட்சிகளை கோவை மாநகர காவல்துறையினர் வெளியிட்டிருக்கிறார்.

ஆனால், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி வானதி சீனிவாசன் பெற்ற பணத்தை திரும்ப கேட்டதால், அவரது ஆதரவாளர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தி.மு.க.வினர் வதந்தியை பரப்பி வருகின்றனர். மேலும், ஒரு பிரபல நாளிதழ் இப்படியொரு செய்தியை வெளியிட்டிருப்பதாக போலியாக கார்டு ரெடி செய்து பொய் செய்தியை பரப்பி வருகிறார்கள். இதனிடையே, இந்த விவகாரம் மேற்கண்ட நாளிதழுக்குத் தெரியவரவே, தங்களது நாளிதழ் சார்பில் பொய் செய்தி பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது பத்திரிகை நிர்வாகம்.

Image

Share it if you like it