உயர்ந்தோர், தாழ்ந்தோர் எனும் நிலை இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம் என ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஜாதிபாகுபாடு கிடையாது. சமத்துவம், சுயமரியாதை கொண்ட மண். இதற்கு, முழுமுதற் காரணம் தந்தை பெரியார் தான் என்று தி.மு.க. மற்றும் தி.க.வினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனினும், விடியல் ஆட்சியில் நிகழும் சம்பவங்களை வைத்து பார்க்கும் போது, ஈ.வெ.ரா. ஒழித்த ஜாதியின் லட்சணம் இதுதானா என்ற கேள்வி மக்கள் மனதில் தற்போது எழுந்துள்ளது.
இதனிடையே, தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு அமைச்சர்களின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், கோவத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் மணம் பூண்டியில் நியாய விலை கடை திறப்பு விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது, பேசிய அமைச்சர், ஆண் பெண் சமம். இந்த, ஊரில் ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஒரு பெண். இவர், ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். இந்த, ஒன்றியத்தின் தலைவராக இருக்கிறார் என்றால் அதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. நீங்க தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த பெண்மணி தானே என்று அப்பெண்ணிடமே அமைச்சர் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது
இதற்கிடையில், முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனிடம் தீண்டாமையை கடைப்பிடித்தார். இதுகுறித்து, பத்திரிகையாளர்களிடம் பாதிக்கப்பட்ட அந்நபர் கூறியதாவது : போக்குவரத்துறை அமைச்சர் ராஜகணப்பன் என்னை 5 முறைக்கு மேல் நீ எஸ்.சி. பிரிவை சேர்ந்தவர் என்பதை சுட்டிக்காட்டி பேசினார். என்னை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். தொடர்ந்து, எஸ்.சி என்பதை சுட்டிக்காட்டினார். என் வாழ்நாளில் இதுவரை இப்படியொரு, மனக்காயத்தை நான் அடைந்தது இல்லை என வேதனையுடன் கூறியிருந்தார். இப்படியாக, தி.மு.க. அமைச்சர்களின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார். அப்போது பேசிய அவர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் எனும் நிலை இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். மேற்கூறிய காணொளியை சுட்டிக்காட்டி அமைச்சர் சேகர் பாபுவை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.